வீங்கிய விரல்கள்… நடுங்கும் கால்கள்… புடின் உடல் நிலை குறித்த பகீர் தகவல்கள்!

ரஷ்யா உக்ரைன் போர்: உக்ரைனுடனான போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போது வெளிவந்துள்ள புடினின் படத்தில், அவரது கை விரல்கள் வீங்கியுள்ள தோற்றம் பல விதமான கவலைகளை எழுப்பியுள்ளது. உண்மையில், புடின் வீங்கிய விரல்களுடன் நாற்காலியை இறுக்கமாகப் பிடித்தபடி காணப்பட்டார். செவ்வாய்கிழமை (நவம்பர் 22) கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் உடன் நடத்திய சந்திப்பில் எடுக்கப்பட்ட புடின் புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் தனது … Read more

பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதி: யார் இந்த லெப்டினென்ட் ஜெனரல் அசிம் முனீர்?

பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அசிம் முனீரை நியமனம் செய்து, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்து உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதை அடுத்து ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட … Read more

இலங்கை அதிபர் ரணில் திட்டவட்டம்| Dinamalar

கொழும்பு: ”நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல், ஆட்சியை முன்கூட்டியே கலைக்க முடியாது,” என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. பெட்ரோல் – டீசல் கிடைக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர், பிரதமர் வீடுகள் … Read more

கஜினி ஸ்டைலில் எலான் மஸ்க் ரசிகர் ஒருவர்…! செவ்வாய் கிரகம் செல்ல துடிக்கிறார்…!

பிரேசிலியா சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு தொடர்ச்சியாக ஊழியர்கள் நீக்கம் என அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று என்ன நடக்குமோ என அவரது நிறுவன ஊழியர்கள் பயந்து நடுங்கிவரும் நிலையில் எலான் மஸ்க்கால் ஈர்க்கப்பட்ட அவரது ரசிகர் ஒருவர், அவரின் பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ள … Read more

ஃப்ளோஸிக்கு வயது 26… – இதுதான் இப்போது உலகின் வயதான பூனை!

லண்டன்: உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த பெண் பூனை ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. லண்டனின் ஆர்பிங்டனைச் சேர்ந்த 26 வயதான ஃப்ளோஸி என்ற பூனைதான் உலகிலேயே வயதான பூனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஃப்ளோஸிதான் உலகின் வயதான பூனை. ஃப்ளோஸியின் 26 வயது என்பது மனிதர்களின் 120 வயதுக்கு ஒப்பாகும்” என்று தெரிவித்துள்ளது. ஃப்ளோஸியின் உரிமையாளர் விக்கி க்ரீன் கூறும்போது, “ஃப்ளோஸி ஒரு மாற்றுத்திறன் பூனை. … Read more

5 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, பொது மக்கள் ஐந்து நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு … Read more

மலேஷியா புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு| Dinamalar

கோலாலம்பூர்: மலேஷியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்க்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டன. இதனையடுத்து அவர் மலேஷியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷிய பார்லி.,க்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 222 தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, 220 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 112 … Read more

Pakistan Army: பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதி Lt Gen அசிம் முனீர்

நியூடெல்லி: பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக (COAS) லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று வருட பதவி நீட்டிப்புக்குப் பிறகு நவம்பர் 29 அன்று ஓய்வு பெறவுள்ள ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்குப் பிறகு, லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் பதவியேற்பார்.பிரதமர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் புதிய COAS ஆகவும், லெப்டினன்ட் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா CJCSC ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசின் அமைச்சரவையால் அனுப்பப்பட்ட இந்த நியமனத்திற்கு, அதிபர் ஆரிஃப் அல்வியின் ஒப்புதல் … Read more

போதைப்பொருள் வைத்திருந்தால் இலங்கையில் மரண தண்டனை| Dinamalar

கொழும்பு: போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று(நவ.,24) முதல் அமலுக்கு வந்தது. 5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக … Read more

ஜாகிர் நாயக்கை நாங்கள் அழைக்கவேயில்லை… பல்டி அடித்த கத்தார்!

கத்தார்: 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் முஸ்லீம் மக்கள் தொகை சுமார் 65 சதவீதமாக உள்ளது. அதே சமயம் 15 சதவீத மக்கள் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழா குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட ஜாகிர் நாயக் உலகக் கோப்பை தொடக்க விழாவிற்கு அழைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் … Read more