‘போய் லவ் பண்ணுங்கப்பா..’ – கல்லூரி மாணவர்கள் காதலிக்க விடுமுறை.. சீனாவில் ஆச்சரியம்.!

லவ் ஹாலிடே சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், இப்போது லவ் ஹாலிடே அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருக்கும் ஒன்பது கல்லூரிகள் இந்த தனித்துவமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தங்கள் மாணவர்கள் காதலிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் மியான்யாங் வான்வழி தொழிற்கல்லூரி தான் இந்த விடுமுறையை முதன் முதலில் அறிவித்ததது. மார்ச் 21ம் தேதி வசந்த கால விடுமுறைக்கு பிறகு, இளம் … Read more

‘ப்ளே பாய்’ இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற பிரான்ஸ் பெண் அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்பு

‘ப்ளே பாய்’ கவர்ச்சிப் பத்திரிகையின் அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்ததால் பிரான்ஸ் நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இத்தனைக்கும் அவர் நாகரிகமாக முழு உடையுடன்தான் போஸ் கொடுத்துள்ளார். இருப்பினும், ஒரு கவர்ச்சிப் பத்திரிகைக்கு போஸ் கொடுத்து, பேட்டியளித்தது பெண்ணியம் என்று அவர் நினைத்துக் கொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மார்லீன் ஸ்கியாபா பிரான்ஸ் நாட்டின் சமூக பொருளாதாரத் துறை அமைச்சராக இருக்கிறார். 40 வயதான இவர் பெண்ணிய எழுத்தாளரும் கூட. ஏற்கெனவே இவர் … Read more

ஆப்கனில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு தடை – இசை ஒலிபரப்பியதால் நடவடிக்கை என விளக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு அந்நாட்டு ஆட்சியாளர்களான தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டில் பெண்கள் நடத்தி வந்த ஒரே வானொலியான ‘சடை பனோவன்’ (பெண்களின் குரல்) என்ற வானொலிக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த வானொலி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இதன் 8 பணியாளர்களில் 6 பேர் பெண்கள். இது அந்நாட்டின் ஒரே பெண்கள் … Read more

‘மீண்டும் நம்பர் ஒன் ஆன மோடி’.. எப்புட்ரா.. உலக தலைவர்கள் அதிர்ச்சி.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகம் முழுவதும் பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார். உலகளாவிய தலைவர்களின் முக்கிய முடிவுகளை கண்காணிக்கும் உலகளாவிய முடிவு நுண்ணறிவு (decision intelligence) நிறுவனமான மார்னிங் கன்சல்ட் இந்த தரவரிசையை வெளியிட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி … Read more

பின்லாந்து மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி ஐ.நா. வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடம் பிடித்தது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் 5 முறை பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் … Read more

அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து: 2 பணியாளர்கள் பலி

அமெரிக்காவில், சிறிய ரக மருத்துவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 பணியாளர்கள் உயிரிழந்தனர். அலபாமா மாகாணத்தில் உள்ள செல்சியாவில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, மருத்துவமனைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து 3 பணியாளர்களுடன் மருத்துவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில், ஹெலிகாப்டர் தீ பிடித்து கீழே விழுந்ததாகவும், அதிலிருந்தவர்களில் ஒருவர் அதே இடத்தில் இறந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் … Read more

மெக்டொனால்ட் நிறுவன அமெரிக்க அலுவலகங்கள் தற்காலிக மூடல்

பர்கர் உணவு சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் கார்ப் அதன் அமெரிக்க அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. Source link

108 வயதில் 7வது ஆல்பத்தை வெளியிடவிருக்கிறார் பிரான்ஸை சேர்ந்த உலகின் மிக வயதான பியானோ கலைஞர்!

பிரான்ஸை சேர்ந்த உலகின் மிக வயதான பியானோ கலைஞரான கொலெட் மேஸ் என்கிற மூதாட்டி 108 வயதில் தனது 7வது ஆல்பத்தை வெளியிடவிருக்கிறார். 1914ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன் பிறந்த கொலெட் மேஸ், தனது 5வது வயதில் தொடங்கி, நூறு ஆண்டுகளைக் கடந்து பியானோ வாசித்து வருகிறார். வரும் ஜூன் மாதம் 109வது வயதில் அடியெடுத்து வைக்கும் இவர் இன்றும் துறுதுறுவென சிறு குழந்தை போல் இயங்குகிறார். இதுவரை 6 ஆல்பங்களை … Read more

அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய கடும் சூறாவளி: 32 பேர் பலி; பலர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளிகள் புரட்டிப்போட்ட நிலையில் அங்கே இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சூறாவளிகளால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” அமெரிக்காவின் மிஸிஸிப்பி மற்றும் அலபாமா மாகாணங்களில் கடந்த வாரம் வீசிய அதிசக்திவாய்ந்த சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுமார் 23 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மீண்டும் அமெரிக்காவை சூறாவளிகள் தாக்கியது. இதில் மெம்பிஸ், டென்னஸி ஆகிய மாகாணங்கள் … Read more

பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்!

Mcdonald’s US Office Layoff: உலகின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலிகளில் ஒன்றான McDonald’s இந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடவுள்ளது. புதிய சுற்று ஆட்குறைப்பு குறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்க நிறுவனம் தயாராகி வருகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. திங்கள் முதல் புதன்கிழமை வரை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்குமாறு நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கு கடந்த வாரம் மின்னஞ்சல் அனுப்பியது. மெக்டொனால்டு இந்த … Read more