புழுதிப் புயலால் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலி தொடர் விபத்து..!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வீசிய புழுதிப் புயலால் நெடுஞ்சாலையில் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிகாகோவில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபார்மர்ஸ்வில்லி நகருக்கு அருகே இண்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது,அங்கு திடீரென பலத்த காற்று வீசியதை தொடர்ந்து புழுதிப் புயல் உருவானது. … Read more