பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்வெட்டால் 48 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்வெட்டால் 48 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 9 மணி நேரத்திற்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறையின் இறுதி நாளான இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். Source link

ஈகுவடார்: ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் – 10 பேர் பலி

கியுடா, ஈகுவடார் நாட்டில் போதைப்பொருள் கும்பல் அதிக அளவில் உள்ளது. இந்த கும்பல்கள் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய துறைமுக நகரான கவ்யாகியுல் நகரில் நேற்று இரவு ஆயுதமேந்திய கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் யார்? என்பது குறித்து … Read more

பள்ளிமாணவர்கள் பங்கேற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் பெ செயிண்ட் லுயிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது, இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 வயது இளைஞன் சக மாணவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 18 வயது இளைஞர், 16 வயது சிறுவன் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் … Read more

புதிய உரிமையாளரிடமிருந்து தப்பியோடிய ‘கோல்டன்-ரெட்ரீவர்’ 64 கி.மீ. தொலைவில் உள்ள பழைய உரிமையாளர் வீட்டில் தஞ்சம்..!

நாய்களின் நன்றி மறவாமைக்கு மேலும் ஒரு சான்றாக, வட அயர்லாந்தில், கோல்டன் ரெட்ரீவர் (Golden Retriever) நாய் ஒன்று, 27 நாட்கள், இரவு பகலாக அலைந்து, 64 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பழைய உரிமையாளரின் வீட்டை தேடிக்கண்டுபிடித்து தஞ்சமடைந்துள்ளது. டெர்ரி நகரைச் சேர்ந்த ஒருவர், தனது கோல்டன் ரெட்ரீவர் நாயை பிளெமிங் என்பவரிடம் விற்றுள்ளார். அங்கிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளெமிங்கின் வீட்டை அடைந்ததும் அந்த நாய் காரிலிருந்து வெளியே குதித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. தொண்டு … Read more

இலவச மாவு வழங்கும் திட்டத்தில் ₹20 பில்லியன் ஊழல்! பாகிஸ்தான் அரசு மீது குற்றசாட்டு!

பாகிஸ்தானில் மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் இலவச மாவுக்காக கிலோமீட்டர்கள் தூரம் என்ற அளவில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த மையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 

ஸ்பெயினில் ரோபோ மூலம் பிறந்த பெண் குழந்தைகள்… குறைந்த கட்டணத்தில் செயற்கை கருத்தரிப்பு முயற்சி!

ஸ்பெயினில், பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர். அவை அமெரிக்காவின் நியூயார்க் நகர கிளினிக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அந்த ரோபோக்களைப் பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு உருவான முதல் 2 பெண் குழந்தைகள் எவ்வித சிக்கலுமின்றி பிறந்தன. இதன் மூலம் செ யற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு பயன்படும் இன்-விட்ரோ ஃபெர்டிலைசேஷன் சிகிச்சையை மிகக் குறைந்த கட்டணத்தில் பெண்கள் பயன்படுத்த … Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபு ஹூசேன் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் ஏரோடகன் அறிவிப்பு!

துருக்கி ராணுவத்தினர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். தலைவர் அபு ஹூசேன் குவாரேஷியை சுட்டுக் கொன்றதாக அதிபர் ஏரோடகன் தெரிவித்துள்ளார். துருக்கியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் அபு ஹூசேனை கண்காணித்து வந்ததாகக் கூறினார். நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக அவர் உறுதி செய்தார். தீவிரவாத இயக்கங்கள் மீது தொடர்ந்து பாரபட்சமற்ற யுத்தம் தொடரும் என்றும் ஏரோடகன் உறுதிபடத் தெரிவித்தார். தீவிரவாதிகள் தாக்குதலால் துருக்கியில் இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர். Source … Read more

மெக்சிகோவில் பேருந்து குன்றில் இருந்து கவிழ்ந்து விபத்து..! 18 பேர் பலி

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து குன்றில் இருந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். நயாரிட்டில், டெபிக் மற்றும் சுற்றுலாத் தலமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவை இணைக்கும் நெடுஞ்சாலையில் இரவு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது 15 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 11 பெண்கள், 7 ஆண்கள் என 18 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 11 சிறுவர்கள் உள்பட 33 மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். Source link