விமானப் படை பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு இந்திய அமெரிக்கர் ராஜா ஜே சாரி பெயரை பரிந்துரை செய்தார் அதிபர் ஜோ பைடன்!

வாஷிங்டன்: இந்திய அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா ஜே சாரியை விமானப் படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்காவில் தற்போது கர்னலாக இருப்பவர் ராஜா ஜே சாரி. வயது 45, விண்வெளி வீரர். இந்த இளம் வயதில், இவரை அமெரிக்க விமானப் படையில் மிக முக்கியமான பிரிகேடியர் ஜெனரல் பதவியில் நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இதற்கான பரிந்துரையை அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். … Read more

24 இந்திய ஊழியர்களுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்

துபாய்: மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர். ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த 27-ம் தேதி சிறைபிடித்துள்ளனர். இதுகுறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறி ஈரான் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அந்தக் … Read more

ரோபோவை அடித்து நொறுக்கிய சீன பெண்| Chinese woman smashes robot

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-சீன மருத்துவமனையில் வரவேற்பாளர் பணியில் இருந்த ‘ரோபோ’வை பெண் ஒருவர் கட்டையால் சரமாரியாக தாக்கி நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், பல்வேறு துறைகளில், ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இங்கு பெரும்பாலான மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு அனைத்து உடல்நலப் பரிசோதனைகளை செய்யும் பணிகளில் ரோபோக்கள் தான் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், வரவேற்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோவை, பெண் … Read more

விண்வெளியில் நடந்து யு.ஏ.இ., வீரர் சாதனை| UAE player achievement by walking in space

துபாய்,-விண்வெளியில் நடந்த முதல் ஐக்கிய அரபு எமிரேட்சின் வீரர் என்ற சாதனையை சுல்தான் அல்நெயாடி என்ற விண்வெளி வீரர் படைத்துள்ளார். அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக, விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. ௧௨௦ டிகிரி செல்ஷியஸ் கடந்த மார்ச் ௨ம் தேதி மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த சுல்தான் அல் நெயாடி உட்பட, ஆறு வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். விண்வெளியில் தன் இரண்டு மாத பயணத்தை … Read more

முடக்கப்பட்ட ராணுவ நிதி உதவியை திரும்ப அளிக்கும்படி பாக்., கோரிக்கை| Pakistan demands return of frozen military aid

வாஷிங்டன்-பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவியை திரும்ப அளிக்கும்படி, அமெரிக்காவிடம் பாக்., துாதர் வலியுறுத்தி உள்ளார். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டும் பணியில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறின. இதற்கு பின், பாகிஸ்தானுக்கும், அமெரிக்கவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பாக்., சீனாவிடம் நெருக்கம் காட்டுவதும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு உதவுவதும் அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுக்கான ராணுவ … Read more

திவாலாகும் நிலையில் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி… 11 நிறுவனங்கள் 30 பில்லியன் டாலர் கடன் வழங்கியும் மீட்க முடியவில்லை..!

திவாலாகும் நிலையில் உள்ள ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கையகப்படுத்த அமெரிக்க அரசின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அந்த வங்கியின் பங்குகள் கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமையன்று 40% சரிந்ததன் மூலம், இந்தாண்டில் இதுவரை 97% சரிவடைந்து இருப்பதாக தெரிகிறது. இந்த வங்கியை மீட்க 11 மிகப்பெரிய கடன் நிறுவனங்கள் 30 பில்லியன் டாலர்களை வழங்கின. எனினும் வங்கி திவாலாவதை … Read more

பாக்.,ல் மருந்துகளின் விலை 20 சதவீதம் உயர்வு | 20 percent increase in the price of medicines in Pakistan

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பொது மருந்துகளின், சில்லறை விலையில், 20 சதவீதமும், அத்தியாவசிய மருந்துகளின், சில்லறை விலையில், 14 சதவீதமும் உயர்த்த, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியில், சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வேளையில், இரு வேளை உணவுகள் கிடைக்கவே, போராடி வருகின்றனர். கடந்த மாதம், அந்நாட்டின் பணவீக்க விகிதம், 35 சதவீதத்தை எட்டிய நிலையில், உணவு பணவீக்க விகிதம், 47 சதவீதமாக உயர்ந்ததாக, அந்நாட்டில் இருந்து வெளிவரும், … Read more

பூமியின் சுற்றுவட்ட பாதையில் ஹப்பிள் தொலைநோக்கியின் 33 ஆண்டுகள்! – நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்

நியூயார்க்: ஹப்பிள் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டு 33 வருடங்கள் கொண்டாடும் வகையில் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1990-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி இதுவாகும். ஹப்பிள் தொலைநோக்கி ஒரு பேருந்து அளவுள்ளது. 97 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை ஹப்பிள் சுற்றி வருகிறது. (இந்த வேகத்தில் சென்றால் சுமார் ஒன்றரை நிமிடத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றுவிடலாம்). அகச்சிவப்பு கதிர், புறஊதா கதிர், காணுறு ஒளி … Read more

சீனா: குழந்தை பெத்துக்க இவ்வளவு சலுகைகளா.. வேற வழியில்ல ப்ரோ.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் சீனாவில் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் ஜெயிக்கணும்னா, மாணவர்கள் இதை கண்டிப்பா கத்துக்கணும்! குறைந்த மக்கள் தொகை சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவு குறைந்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் இருந்து சீனாவை இந்தியா முந்தியுள்ளது. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளே … Read more

உக்ரைன் மீது தாக்குதல் 21 பேர் பரிதாப பலி | 21 people were tragically killed in the attack on Ukraine

உமன் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ‘ட்ரோன்’கள் நடத்திய திடீர் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே 14 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரில் உக்ரைன் தலைநகர் கீவ், கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட … Read more