மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்படும்… தொழில் நுட்ப ஆதாரங்களை மேற்கோள் காட்டி நிபுணர்கள் தகவல்

அமெரிக்க மென் பொருள் நிறுவனமான மைக்ரோ சாப்ட் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் கட்டமைப்புகள் தடையின் கீழ் இல்லாத தனியார் நிறுவனங்களின் மென் பொருள் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் சந்தையில் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும், மென்பொருள் திருட்டை குறைக்கவும் முயற்சிப்பதாக மென்பொருள் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Source link

படகு கவிழ்ந்து 11 பேர் பலி| 11 people died after the boat capsized

இந்தோனேஷியாவில் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர். இந்தோனேஷியாவின் ரியாவ் மாகாணத்தில் உள்ள டெம்பிலாஹன் துறைமுகத்தில் இருந்து நேற்று ஆறு பணியாளர்கள், 68 பயணியருடன் படகு ஒன்று தஞ்சுங் பினாங்கிற்கு சென்றது. ரம்ஜான் விடுமுறையை முடித்துவிட்டு குடும்பத்துடன் பலர் பயணித்தனர். படகு பலத்த காற்றில் சிக்கி கவிழ்ந்து கடலில் மூழ்கியது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் பெண்கள் குழந்தைகள் என 11 உடல்களை மீட்டனர்; 62 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். … Read more

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் களைகட்டிய பாரம்பரிய பலூன் திருவிழா..!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாரம்பரியமான பலூன் திருவிழா களைகட்டியது. ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜாவா தீவில் ஆண்டுதோறும் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மலைகளுக்கு நடுவே அமைந்துள வோனோசோபோ பகுதி மக்கள், தங்களது வீடுகளில் தயாரிக்கப்பட்ட வண்ண மயமான ராட்சத பலூன்களை பறக்கவிட்டனர். வானை அலங்கரித்த வண்ண பலூன்களை நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். Source link

இருளில் மூழ்கிய ஏர்போர்ட்… கும்மிருட்டில் மீட்புப் பணி… இந்திய விமானப்படை சூடானில் சாகசம்

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருளில் மூழ்கிக் கிடந்த ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கிய இந்திய விமானப்படை வீரர்கள், சினிமா பாணியில் 121 இந்தியர்களை மீட்டுள்ளனர். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 13 தவணைகளாக இதுவரை 2 ஆயிரத்து 400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் … Read more

மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்காக லண்டன் கொண்டுவரப்பட்ட புனித கல்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்காட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. விதியின் கல் என அழைக்கப்படும் இந்த கல் பண்டைய ஸ்காட்லாந்தின் இறையாண்மையின் சின்னமாக பார்க்கப்படுகிறது.152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த முதலாம் எட்வர்ட் ஸ்காட்லாந்திடமிருந்து கைப்பற்றினார். மே 6ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளதால், எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கல், … Read more

கிழக்கு லடாக் எல்லையில் படைகளை திரும்ப பெறாதவரை இந்தியா – சீனா இடையே சுமுக உறவு ஏற்படாது: சீன அமைச்சரிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையில் சீனா ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அத்துமீறியது முதல், இரு நாடுகளும், கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 50,000 ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளன. இரு தரப்பும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் … Read more

தொண்ட புற்றுநோய்க்கான காரணத்தை கண்டறிந்த ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Scientific Research: வாய்வழி உடலுறவு தொண்டை புற்றுநோயுடன் தொடர்புடையது என்று ஆய்வு ஒன்று உறுதி செய்கிறது. டான்சில்ஸ் மற்றும் தொண்டையின் பின்புறம் உள்ள புற்றுநோய், பெரும்பாலும் HPV வைரஸால் ஏற்படுகிறது

வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துகிறது அமெரிக்கா

வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்த கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் 1980ம் ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பகுதிக்கு வரவிருப்பதாகவும், தங்களை முழுமையாகப் பாதுகாக்க இருப்பதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும் தென் கொரியா நோக்கி வரும் ஏவுகணைகள், விமானம் தாங்கிக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், நீண்ட தூர … Read more

உலக நடன தினம்| world dace day

இசைக்கு ஏற்ப உடலை அசைத்து ஆடுவது நடனம். இது மனது, உடல்நலத்துக்கு நல்லது. உலகில் பலவகையான நடனங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த கலை. நடனத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 29ல் உலக நடன தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தியேட்டர் நிறுவனம், ஐ.நா., வின் யுனெஸ்கோ இணைந்து இத்தினத்தை உருவாக்கின. பிரான்ஸ் நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நுாவர், பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர். இவரை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த … Read more

சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் – வெள்ளை மாளிகை அறிவிப்பு

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரினே ஜீன் பெரைரா வேண்டுகோள் விடுத்துள்ளார். சூடானின் தற்போதை நிலை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சூடானில் சண்டையிட்டு வரும் இரு ராணுவ குழுவினரும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.  Source link