Nostradamus: 100 ஆண்டுகளில் உலகில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்: நோஸ்ட்ராடாமஸ் ChatGPT கணிப்பு

ChatGPT &  AI Nostradamus predictions: அடுத்த நூறு ஆண்டுகளில் என்ன நடக்கும்? ஆருடம் சொல்வது தீர்க்கதரிசிகள் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு எனப்பதும் ஏஐ சாட்ஜிபிடி தொழில்நுட்பமும் தான்…

ரஷ்ய போர் விமானம் திடீரென தீப்பற்றி ஏரியில் விழுந்து விபத்து

ரஷ்ய போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது தீப்பற்றி, ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  மிக்-31 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, விமானத்தின் ஒரு என்ஜினில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம், Rizh-Guba தீவுக்கு அருகேயுள்ள மர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ஏரியில் விழுந்தது. அந்த விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிர் தப்பியதாகவும், அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  Source link

கென்யா: பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

நைரோபி, கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம் உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு சொந்தமான பண்ணையில் சிலர் உடல் மெலிந்த நிலையில் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த வாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பண்ணையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் 15 … Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான உரையாடல் அர்த்தம் நிறைந்தது: ஜெலன்ஸ்கி

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் அர்த்தம் நிறைந்ததாக இருந்தது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடல் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜெலன்ஸ்கி, “சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது. மிக நீண்ட இந்த உரையாடல் அர்த்தம் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த தொலைபேசி அழைப்பும், சீனாவுக்கான உக்ரைனின் தூதர் நியமனமும் இருதரப்பு உறவுகளின் … Read more

காபூல் விமான நிலைய தாக்குதல்: மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சுட்டுக்கொலை – அமெரிக்கா தகவல்

காபூல், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியேறியதும், அந்த நாடு தலீபான்கள் வசமானது. அதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வெடித்தன. இதில் அப்பாவி பொதுமக்கள் 170 பேர் … Read more

பெரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம்

சிலியில் இருந்துவரும் வெனிசுலாவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாடு வழியாக செல்வதை தடுக்க பெரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளை பலப்படுத்தவும், ஆவணங்கள் இல்லாமல் சிலியில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் புலம்பெயர்ந்தோரை தடுக்கவும் பெரு அதிபர் டினா பொலுவார்ட் உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அவசர நிலையை டினா பொலுவார்ட் அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈக்வடார் வழியாக நுழைந்த 3 முதல் 4 லட்சம் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் … Read more

பிரதமர் மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: ஆஸி.யில் பாகிஸ்தானியர்கள் புகழாரம்

மெல்பர்ன்: பிரதமர் நரேந்திர மோடி இருந்தால் எதுவும் சாத்தியம் என்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்னில் அமைந்துள்ள புன்ஜில் அரண்மனையில் உலக நல்லெண்ணம் தொடர்பான நிகழ்ச்சிக்கு டெல்லி என்ஐடி அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த டாக்டர் தாரிக் பட் (அகமதியா முஸ்லிம் கம்யூனிட்டி) கூறியதாவது. அனைத்து சமூகங்களையும் மதிக்கும் … Read more

உணவு கொண்டுவந்த டெலிவரி பாய் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை..!

அமெரிக்காவில், உணவு கொண்டுவந்த டெலிவரி பாய் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஃபுளோரிடாவை சேர்ந்த ரண்டால் கூக், உபெர் ஈட்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்தார். கடந்த 19ந்தேதி கடைசி டெலிவரியை முடித்து விட்டதாகவும், விரைவில் வீட்டிற்கு வருவதாகவும் கூக் தனது மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். வெகுநேரம் ஆகியும் கூக் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த மனைவி உபெர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கடைசியாக கூக் டெலிவரி செய்து … Read more

சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் தமிழருக்கு சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி நேற்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்தப்படுவதற்கு உதவியதாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா (46) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்கராஜு குற்றவாளி என கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் அவருக்கு மரண தண்டனை வழங்கியது. … Read more

சர்வாதிகாரியாக இருந்து 30 ஆண்டுகள் ஆட்சி செய்த சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர்அல் பசீர் மருத்துவமனைக்கு இடமாற்றம்..

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில், முன்னாள் ஜனாதிபதியும், சர்வாதிகாரியுமான உமர் அல் பசீர், சிறையிலிருந்து ராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1989ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் சூடானை ஆட்சி செய்த உமர், பொதுமக்களுக்கு எதிரான படுகொலைகளை நிகழ்த்தியதாக சர்வதேச நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தலைநகர் கார்ட்டூமில் உள்ள சிறைச்சாலையில் உமர் அடைக்கப்பட்டார். தற்போது ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், 79 வயதான உமரின் உடல்நிலையை … Read more