நிலநடுக்கத்தின் போது பிரிந்த தாயும், சேயும் மீண்டும் இணைந்தனர்.. உச்சி முகர்ந்து குழந்தையை வாரி அணைத்துக் கொண்ட தாய்
துருக்கியில் நிலநடுக்கத்தின் போது பிரிந்த தாயும், சேயும் இரு மாதங்கள் கழித்து மீண்டும் இணைந்தனர். பிப்ரவரி மாதம் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஹடே மாகாணத்தில் 5 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த கைக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. “அதிசய குழந்தை” என்று அழைக்கப்பட்ட அந்த பெண் குழந்தையின் தாய் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், குழந்தையின் தாய் யாஸ்மின் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் அது உறுதி செய்யப்பட்ட பின், துருக்கி அமைச்சர், பிரதமரின் விமானம் மூலம் குழந்தையை … Read more