ட்விட்டர் செயலியின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்
சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூகவலைதள செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார். ட்விட்டர் என்றாலே நினைவுக்கு வருவது நீல நிறக் குருவிதான். ஆனால் அந்தக் குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை லோகாவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இருப்பினும் ட்விட்டர் மொபைல் வெர்சனில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படவில்லை. எலான் மஸ்க்கின் இந்த திடீர் நடவடிக்கை ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் மஸ்க். … Read more