ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது தயிரை ஊற்றிய நபர் – பரபரப்பு வீடியோ

டெஹ்ரான், ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி(வயது 22) என்ற இளம்பெண்ணை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு … Read more

விஷத்தன்மை கொண்ட பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட 83 வயது பெண் பலி..!

மலேசியாவில் விஷத்தன்மை கொண்ட பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட 83 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரின் கணவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள உடலை பலமடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் பஃபர் மீன் அதிக விஷத்தன்மை உடையது என்பதால் பெரும்பாலும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில், வழக்கமாக மீன் வாங்கும் கடையில் இந்த மீனை வாங்கி சமைத்து மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவில் … Read more

இத்தாலியில் ஆங்கிலத்தை பயன்படுத்த தடை?

ரோம், அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதாவை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது. “இத்தாலி நாட்டு மக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பின் போது ஆங்கிலம் அல்லது வேறு எந்த வெளிநாட்டு மொழியையும் பயன்படுத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் 100,000 யூரோ (சுமார் 90 லட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டும்” என்று … Read more

விண்வெளியில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ள இத்தனை கோடியா?

Space Romance: ஏழு கடல் கடந்து காதலனையோ காதலியையோ சந்திக்கும் காலம் இப்போது கடந்துவிட்டது. இப்போது காதல், ரொமான்ஸ் மற்றும் உடலுறவுக்கான வாய்ப்பும் விண்வெளியில் சாத்தியமாகும் என சொன்னால் நம்ப முடிகிறதா. இது ஏதோ, ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் கதையல்ல, உண்மைதான். நீங்கள் விண்வெளியில் உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய விரும்பினால், நாசாவின் இந்த திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.  இதுவரை எந்த மனிதனும் விண்வெளியில் காதல் செய்யவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியப்படும். புதிய … Read more

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேர் தலீபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

காபுல், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சர்வதேச நாடுகளில் இருந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேரை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பைப் பெற கடுமையாக முயற்சித்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 2 பேர் கடந்த ஜனவரி மாதம் தலீபான்களால் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் டிரம்ப் கைது.. காய் நகர்த்தும் ஜோ பைடன்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் பாலியல் விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதற்கு பின்னால் அதிபர் ஜோ பைடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் தேர்தல் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறு வழக்கம். அந்தவகையில் அத்பர் ஜோ பைடனின் பதவிக்காலம் விரைவில் முடியப்போகிறது. தேர்தலுக்கு குடியரசு கட்சியின் … Read more

‘ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி’ கார் பந்தயம்.. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்..!

ஏராளமான விபத்துகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி கார் பந்தயத்தில், மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார். மெல்போர்னில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சாம்பியனான வெர்ஸ்டப்பன் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். போட்டி நிறைவடைய சில சுற்றுகளே இருந்த நிலையில், கார்கள் ஒன்றோடொன்று மோதியும், தடுப்பு சுவரில் மோதியும் அடுத்தடுத்து விபத்துகள் நேர்ந்ததால் போட்டி 3 முறை நிறுத்தப்பட்டது. 8 கார்கள் விபத்துக்குள்ளாகி வெளியேறிய நிலையில், எஞ்சியிருந்த 12 போட்டியாளர்களில் வெர்ஸ்டப்பன் … Read more

'நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்' – செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பதிலளித்த போப் பிரான்சிஸ்

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 86 வயது போப் பிரான்சிஸ், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த புதன்கிழமை ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் சில நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் … Read more

ரிஷி சுனக்கின் ஒரு வார விமான பயணத்தில் ரூ.5.07 கோடி செலவு; எதிர்க்கட்சிகள் கண்டனம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டில் அவர், ஒரு வாரத்தில் மேற்கொண்ட விமான பயணத்திற்கு ரூ.5.07 கோடி வரை செலவாகி உள்ளது என தெரிய வந்து உள்ளது. அவர் தனியார் ஜெட் விமானத்தில் பயணித்ததில், மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரதமர்களில் பெரிய பணக்காரராக திகழும் சுனக்கிற்கு, இந்த … Read more

லண்டனில், ஓட்டுநரில்லா தானியங்கி காரில் பில் கேட்ஸ் பயணம்..!

உலகப் பெருங் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், லண்டனில், ஓட்டுநரில்லா தானியங்கி காரில் பயணம் செய்தார். வெய்வ்  என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுவரும் மாதிரி தானியங்கி காரில், பில் கேட்ஸும், வெய்வ் நிறுவன சி.இ.ஓ-வும் சேர்ந்து பயணித்தனர். வாகன போக்குவரத்தும், கூட்ட நெரிசலும் நிறைந்த லண்டன் மாநகர வீதிகள் வழியாக சென்ற தானியங்கி காரை, பெண் ஒட்டுநர் ஒருவர் அடிக்கடி ஸ்டீயரிங்கை அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்தார். பெரும்பாலும் தானியங்கி கார்கள், அவற்றின் memory-ல் feed செய்யப்பட்டுள்ள பாதைகள் வழியாக … Read more