விண்வெளியில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ள இத்தனை கோடியா?

Space Romance: ஏழு கடல் கடந்து காதலனையோ காதலியையோ சந்திக்கும் காலம் இப்போது கடந்துவிட்டது. இப்போது காதல், ரொமான்ஸ் மற்றும் உடலுறவுக்கான வாய்ப்பும் விண்வெளியில் சாத்தியமாகும் என சொன்னால் நம்ப முடிகிறதா. இது ஏதோ, ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் கதையல்ல, உண்மைதான். நீங்கள் விண்வெளியில் உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய விரும்பினால், நாசாவின் இந்த திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.  இதுவரை எந்த மனிதனும் விண்வெளியில் காதல் செய்யவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியப்படும். புதிய … Read more

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேர் தலீபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

காபுல், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சர்வதேச நாடுகளில் இருந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேரை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பைப் பெற கடுமையாக முயற்சித்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 2 பேர் கடந்த ஜனவரி மாதம் தலீபான்களால் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் டிரம்ப் கைது.. காய் நகர்த்தும் ஜோ பைடன்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் பாலியல் விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதற்கு பின்னால் அதிபர் ஜோ பைடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் தேர்தல் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறு வழக்கம். அந்தவகையில் அத்பர் ஜோ பைடனின் பதவிக்காலம் விரைவில் முடியப்போகிறது. தேர்தலுக்கு குடியரசு கட்சியின் … Read more

‘ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி’ கார் பந்தயம்.. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்..!

ஏராளமான விபத்துகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி கார் பந்தயத்தில், மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார். மெல்போர்னில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சாம்பியனான வெர்ஸ்டப்பன் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். போட்டி நிறைவடைய சில சுற்றுகளே இருந்த நிலையில், கார்கள் ஒன்றோடொன்று மோதியும், தடுப்பு சுவரில் மோதியும் அடுத்தடுத்து விபத்துகள் நேர்ந்ததால் போட்டி 3 முறை நிறுத்தப்பட்டது. 8 கார்கள் விபத்துக்குள்ளாகி வெளியேறிய நிலையில், எஞ்சியிருந்த 12 போட்டியாளர்களில் வெர்ஸ்டப்பன் … Read more

'நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்' – செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பதிலளித்த போப் பிரான்சிஸ்

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 86 வயது போப் பிரான்சிஸ், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த புதன்கிழமை ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் சில நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் … Read more

ரிஷி சுனக்கின் ஒரு வார விமான பயணத்தில் ரூ.5.07 கோடி செலவு; எதிர்க்கட்சிகள் கண்டனம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டில் அவர், ஒரு வாரத்தில் மேற்கொண்ட விமான பயணத்திற்கு ரூ.5.07 கோடி வரை செலவாகி உள்ளது என தெரிய வந்து உள்ளது. அவர் தனியார் ஜெட் விமானத்தில் பயணித்ததில், மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரதமர்களில் பெரிய பணக்காரராக திகழும் சுனக்கிற்கு, இந்த … Read more

லண்டனில், ஓட்டுநரில்லா தானியங்கி காரில் பில் கேட்ஸ் பயணம்..!

உலகப் பெருங் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், லண்டனில், ஓட்டுநரில்லா தானியங்கி காரில் பயணம் செய்தார். வெய்வ்  என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுவரும் மாதிரி தானியங்கி காரில், பில் கேட்ஸும், வெய்வ் நிறுவன சி.இ.ஓ-வும் சேர்ந்து பயணித்தனர். வாகன போக்குவரத்தும், கூட்ட நெரிசலும் நிறைந்த லண்டன் மாநகர வீதிகள் வழியாக சென்ற தானியங்கி காரை, பெண் ஒட்டுநர் ஒருவர் அடிக்கடி ஸ்டீயரிங்கை அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்தார். பெரும்பாலும் தானியங்கி கார்கள், அவற்றின் memory-ல் feed செய்யப்பட்டுள்ள பாதைகள் வழியாக … Read more

வானில் பறந்த ஹாட் ஏர் பலூனில் திடீர் தீ விபத்து.. சுற்றுலா பயணிகள் 2 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!

மெக்சிகோவில், சுற்றுலா பயணிகள் சென்ற ஹாட் ஏர் பலூன் (Air Balloon) திடீரென தீப்பற்றி எரிந்ததில் இருவர் உயிரிழந்தனர். வரலாற்று சிறப்பு மிக்க டியோட்டிவாக்கான் நகரில் அமைந்துள்ள பிரமிட்களை வானிலிருந்து கண்டுகளிக்க டூர்-ஆப்பரேட்டர்கள் ஹாட் ஏர் பலூன்களை இயக்கிவருகின்றனர். வானில் சென்ற ஏர் பலூனின் பயணிகள் நிற்கும் கூடை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதில் பயணித்த ஆணும், பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்த நிலையில், ஏர் பலூனினிலிருந்து கீழே குதித்த சிறுவன் லேசான் தீக்காயங்களுடன் உயிர் … Read more

ஹிஜாப் அணியாத இரு பெண்கள் தலையிலும் தயிர் டப்பாவை கவிழ்த்து அட்டகாசம் செய்தவன் கைது..!

ஈரானில், ஹிஜாப் அணியாத இரு பெண்கள் தலையில் தயிரை ஊற்றி ரகளை செய்தவனை கைது செய்த போலிசார், ஹிஜாப் அணியாததற்காக அந்த இரு பெண்களையும் சேர்த்து கைது செய்தனர். மஷத் நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு வந்த ஒருவன், வரிசையில் நின்ற இரு பெண்களிடம் ஏன் ஹிஜாப் அணியவில்லை எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டான். பின், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தயிர் டப்பாவை எடுத்து இரு பெண்கள் தலையிலும் கவிழ்த்தான். கடை உரிமையாளர் ஓடி வந்து அவனை பிடித்து … Read more

இத்தாலியில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளுக்கு தடை?

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் இத்தாலியை சேர்ந்தவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்தின்போது ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியை பயன்படுத்தினால் ஒரு லட்சம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி … Read more