எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகிக்கிறது பாகிஸ்தான்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு
நியூயார்க்: சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி, எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களும், வெடிபொருட்களும் விநியோகிக்கப்படுவது, இந்தியாவுக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார். ‘‘ஆயுத ஏற்றுமதி ஒப்பந்த விதிமுறை மீறலால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்’’ என்ற தலைப்பிலான விவாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் தெளிவற்ற … Read more