ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கிழக்கு பசிபிக் கடற்கரை பகுதியில் கம்சட்கா பிராந்தியத்திற்கு தெற்கே 44 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தரைப்பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷ்யாவின் அவசர கால அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.  Source link

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது

நியூயார்க்: ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு (44) பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார். லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். கைதுக்கு பின்னான நடவடிக்கைகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. அவர் சரணடைவார் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், அதன்படி லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார். வழக்கின் பின்னணி: டொனால்டு ட்ரம்ப் … Read more

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு நிகராக பாகிஸ்தான் 287 ரூபாய் 29 காசுகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி 285 ரூபாய் 9 பைசாவாக இருந்த நிலையில், தற்போது உச்சபட்ச சரிவு அளவை பாகிஸ்தான் ரூபாய் எட்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், தனது பொருளாதாரத்தை மீட்க சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச … Read more

அமெரிக்காவில் பஸ் விபத்து ஆந்திர இளைஞர் உயிரிழப்பு| Andhra youth dies in bus accident in USA

நியூயார்க்:அமெரிக்க விமான நிலையம் அருகே பஸ் மோதியதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஷ்வசந்த் கொல்லா, 47, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றினார். நேற்று முன் தினம், தன் நண்பரை வரவேற்க, லோகன் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பஸ் மோதியதில், சில அடி துாரம் இழுத்துச் செல்லப்பட்ட விஷ்வசந்த், அதே இடத்தில் உயிரிழந்தார். பஸ் ஓட்டிய பெண் கைது செய்யப்பட்டார். … Read more

செலவை குறைக்க… கூகுள் நிறுவனம் அடுத்த அதிரடி; கலக்கத்தில் பணியாளர்கள்

நியூயார்க், உலக பொருளாதாரம் மந்த நிலையின் ஒரு பகுதியாகவும், உக்ரைன் போர், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தன. இந்த பட்டியலில் கூகுள் நிறுவனமும் இடம் பெற்றது. இதன்படி, கடந்த ஜனவரி 3-ம் வாரத்தில் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கும் அதிரடி முடிவை கூகுள் நிறுவனம் எடுத்தது. இதற்காக அந்த பணியாளர்களுக்கு தனியாக இ-மெயில் வழியே தகவல் அனுப்பப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து பணியாளர்கள் மீள்வதற்குள் கூகுள் … Read more

பங்காபஜாரில் தீ விபத்து: ரமலான் பண்டிகைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆடைகள், 3,000 கடைகள் எரிந்து சேதம்

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான ஆடை சந்தையான பங்காபஜாரில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3 ஆயிரம் கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. 600 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் கொளுந்து விட்டெறிந்த தீயை அணைக்கும் பணியில் 6 மணி நேரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். சிறிய அளவில் தடுப்புகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும் என்பதால் எப்போதும் அதிக நெருக்கடியோடு காணப்படும். ரமலான் பண்டிகையை முன்னிட்டு … Read more

நேட்டோ அமைப்பில் இணைந்த ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து…!

ஹெல்சின்கி, உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது 3-ம் … Read more

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவு

மணிலா, பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. தினத்தந்தி Related Tags : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்

டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகை வழக்கு; அமெரிக்க கோர்ட்டில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை கோரிய வழக்கறிஞர்கள்

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார். தொழிலதிபரான இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்து உள்ளனர். 10-க்கும் கூடுதலான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் … Read more