அமெரிக்காவில் முதல்முறையாக இந்து மத வெறுப்பை கண்டித்து ஜார்ஜியா மாநில அரசு தீர்மானம்

அமெரிக்காவில் முதல்முறையாக இந்து மத வெறுப்பை கண்டித்து ஜார்ஜியா மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவில், இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஒருசிலரால் இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு வருவதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் கல்வி, மருத்துவம், ஐ.டி. போன்ற துறைகளில் முக்கிய பங்காற்றுவதுடன், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் யோகாசனம், ஆயுர்வேதம் , தியானம் போன்றவற்றை கொடையாக அளித்துள்ளதாகவும் … Read more

மருத்துவமனையிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார் போப் பிரான்சிஸ்..!

சுவாசக் கோளாறால், இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை வாயிலில் அவரை காண வந்திருந்தவர்களை பார்த்து கையசைத்துவிட்டு, வாடிகன் நகருக்கு கிளம்பினார். ஈஸ்டர் பண்டிகையை அனுசரிக்கும் விதமாக கொண்டாடப்படும் குருத்தோலை ஞாயிறு அன்று நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்பார் என வாடிகன் தேவாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

‛ ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் அதிபர் நம்பிக்கை| We will recover the lands lost to Russia: President of Ukraine released a video and challenged

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் துவங்கியது. ஓராண்டுகாலமாக நடந்து வரும் போரில், உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. இது குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: இந்த போரில் உக்ரைன் … Read more

அமெரிக்க மற்றும் ருமேனிய படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் பயிற்சி

நேட்டோ ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க மற்றும் ருமேனியப் படைகள் இணைந்து ருமேனிய விமானப்படை தளத்தில் வான்வழித் தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டன. நேட்டோ படைகளை வலுப்படுத்துதல், நட்பு நாடுகளுக்கு உறுதியளித்தல் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்கும் முயற்சியாக கடந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் 101வது வான்வழிப்படை ருமேனியாவிற்கு வந்தது. கடந்த வியாழக்கிழமை ருமேனிய வான், கடல் மற்றும் தடைப்படைகளுக்கு கருங்கடலில் பயிற்சி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று உக்ரைனில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள … Read more

சிலியில் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்து வரும் கடல் சிங்கங்கள்

சிலிநாட்டில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடல் சிங்கங்கள் உயிரிழந்து வருகின்றன. வால்பரைசோ கடற்கரையில் உயிரிழந்த கடற்சிங்கங்கள் கரை ஒதுங்கியுள்ளன. கடல் சிங்கங்களின் சடலங்கள் சிதைவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக, முக்கிய சுற்றுலாப் பாறைப் பகுதியான கேவ்ஸ் டி அன்சோட்டாவை மூடுவதாக அரிகா மேயர் அறிவித்தார். இதற்கிடையில், மெலிபில்லாவில், கோழி பண்ணையில் உள்ள பணியாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தாக்காமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டது. சிலியில் 53 வயது நபர் ஒருவருக்கும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. Source link

ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியும், உணவு பற்றாக்குறையும் நிலவுகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் ஏற்கனவே பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ரம்ஜான் மாதத்தில் சாதாரண பாகிஸ்தானியர்கள் வாழ்வதே இப்போது கடினமாகி வருகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு அல்ல, மாறாக நேரடியாக விண்வெளியை தொட்டு விட்டது எனலாம். ராக்கெட் வேகத்தில் விலை வாசி உயருகிறது பாகிஸ்தானின் பல பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான துனியா … Read more

படகுகள் கடந்து செல்லும் தூக்குப்பாலத்தின் உச்சியில் செங்குத்தாக தொங்கிய இளைஞர்..!

அமெரிக்காவில் தூக்குப் பாலத்தில் இளைஞர் ஒருவர் செங்குத்தாக தொங்கிய வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. ப்ளோரிடா மாகாணத்தின் கடற்கரை நகரமான மியாமியில் பெரிய படகுகள் கடலுக்குச் செல்வதற்காக பிரிக்கல் அவின்யூ என்ற பெயரில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் கீழ் பெரிய படகு செல்வதற்காக இந்தப் பாலம் தூக்கப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் பாலத்தில் ஏறி செங்குத்தாக சென்றதும் அதைப் பிடித்து தொங்கியபடி சாகசம் செய்தார். 90 அடி உயரத்தில் இருந்த அவர் தனது … Read more

தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனீவா: தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதே காலகட்டத்தில் 36 லட்சம் புதிய தொற்றுகளும் 25 ஆயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இது அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது முறையே 27 சதவீதம் … Read more

ரஷ்யாவின் டேங்குகளை அடுத்தடுத்து நிர்மூலமாக்கிய உக்ரைன் வீரர்கள்..!

உக்ரைன் நாட்டின் கிராமப்பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய டேங்குகளை உக்ரைன் வீரர்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகி உள்ளது. டொனெட்ஸ்க் என்ற கிராமம் வழியாக ரஷ்யாவின் ஐந்து T72 ரக டேங்குகள் நுழைந்து சென்றன. இதனைக் கண்காணித்துக் கொண்டிருந்த உக்ரைன் வீரர்கள் தாங்கள் வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களின் உதவியுடன் ஒவ்வொரு டேங்காக சுட்டு வீழ்த்தினர். இதற்காக அவர்கள் அமெரிக்கா வழங்கிய ஜாவ்லின் ரக ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தனர். Source link