காசா மீது ‘உடனடி சக்திவாய்ந்த’ தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று … Read more

29 வயதில் ரூ.249 கோடிக்கு அதிபதியான இளைஞர்! ஒரே நாளில் மாறிய தலையெழுத்து..

Kerala Man Wins UAE Lottery : கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், அபுதாபி லாட்டரியில் ரூ.249 கோடியை வென்றிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பான் பிரதமர் ஆதரவு!

டோக்கியோ: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசியாவில் பயணம் மேற்கொண்டு வரும் டொனால்டு ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட அவர் மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியைச் … Read more

அட கொடுமையே.. வீட்டை சுத்தம் செய்யலனா இப்படியா? மனைவி செய்த காரியம்

Latest Crime News:  வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பையாக வைத்திருந்தால், கணவரின் கழுத்தை மனைவி அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த கிரைம் குறித்து விரிவாக பார்ப்போம்.  

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது

மாஸ்கோ: அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது. ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவு​கணையை கடந்த 2018-ம் ஆண்டு அறி​முகம் செய்​தது. சக்​தி​வாய்ந்த ஏவு​கணை தயாரிப்பு திட்​டத்​தில் ஈடுட​வேண்​டாம் என்ற ஒப்​பந்​தத்​தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளி​யேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்​தப்​பட்​டன. அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு … Read more

ஜப்பானுக்கு டிரம்ப் பயணம்

டோக்கியோ, 5 நாள்கள் ஆசிய பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று மலேசியா வந்திருந்தார். அங்கு நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கம்போடியா-தாய்லாந்து இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து இன்று ஜப்பானுக்கு டிரம்ப் சென்றார். தலைநகர் டோக்கியோ விமான நிலையத்திற்கு வருகை தந்த டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமரும், ஷின்சோ அபேவின் அரசியல் வாரிசான சனே தகேச்சியை சந்தித்து … Read more

விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள்; விமான சேவை நிறுத்தம்

வில்னியஸ், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு லித்துவேனியா. நேட்டோ அமைப்பின் உறுப்பினரன இந்நாடு பெலாரஸ் அருகே உள்ளது. உக்ரைன் – ரஷியா போரில் லித்துவேனியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், லித்துவேனியாவின் தலைநகர் வில்னியசில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு மர்ம பலூன்கள் பறந்தன. இதனால் பாதுகாப்பு நலன் கருதி வில்னியஸ் விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த ஹீலியம் பலூன்கள் … Read more

பிரான்ஸ்: ரெயிலில் உள்ளாடையை இழுத்து பலாத்கார முயற்சி; இளம்பெண் அதிர்ச்சி

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே சென்று கொண்டிருந்த ரெயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோர்டானா டயாஸ் (வயது 26) என்ற இளம்பெண் பயணம் செய்தபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் பயந்து போன அந்த இளம்பெண் அலறியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் பற்றி ஜோர்டானா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதன் … Read more

இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

லண்டன், இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் இந்திய வம்சாவளி சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில், இங்கிலாந்தில் மேலும் ஒரு இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த இளம்பெண் இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை வால்சால் நகரில் உள்ள பார்க் ஹால் பூங்காவில் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த இளம்பெண்ணை … Read more

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்த ஜெய்சங்கர்

கோலாலம்பூர், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஏசியான் அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதன்படி, இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ஏசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு … Read more