மியான்மரில் ஆங் சான் சூகியின் கட்சி உள்ளிட்ட 40 அரசியல் கட்சிகள் கலைப்பு

தேர்தலுக்கு முன்னதாக மியான்மர் ஆட்சிக்குழு , சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியை கலைத்து விட்டது. சுமார் இரண்டு ஆண்டுகால ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, ராணுவ ஆட்சியால் நியமிக்கப்பட்ட மியான்மர் தேர்தல் ஆணையம், பதவி நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் கட்சி கலைக்கப்படுவதாக அறிவித்தது. சூகியின் கட்சி உட்பட மொத்தம் 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டன.இதன் மூலம் தேர்தலில் வெற்றியை இராணுவ ஆதரவு யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மென்ட் கட்சி கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது..  Source link

அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழப்பு!

அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் மெக்ஸிகோ வடக்கு எல்லையில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்த 29 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாங்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்தவர்களே தங்களின் மெத்தைகளை எரித்ததால் இந்த விபத்து நேரிட்டதாக மெக்ஸிகோ அதிபர் தெரிவித்துள்ளார். Source link

”ஜெர்மனி வழங்கிய லெப்பர்ட் வகை டேங்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்..” – உக்ரைன்..!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வழங்கிய டேங்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. லெப்பர்ட் 2 வகையைச் சேர்ந்த 18  டேங்குகள் வழங்குவதாக ஜெர்மனி உறுதி அளித்திருந்த நிலையில் அதன் ஒரு பகுதி திங்கள் கிழமை பிற்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார். இந்தவகை டேங்குகளால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்தின் சேலஞ்சர் டாங்கிகள் உக்ரைனை … Read more

கரன்சி மதிப்பு சரிந்ததால் பாகிஸ்தானில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை

கராச்சி: பாகிஸ்தானில் கரன்சி மதிப்பு சரிந்ததால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டுக்கடன் அதிகரிப்பாலும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததாலும், தற்போது அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்தாண்டு ஜுன் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம், நாட்டில் 3-ல் ஒரு பகுதியை மூழ்கடித்தது. இதனால் சுமார் 3 கோடியே 30 லட்சம் பேர் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் 12.5 … Read more

சவுதி பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ளபுனிதத் தலங்களான மெக்கா மற்றும் மெதீனாவுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் முஸ்லிம்கள் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள ஆசிர் மாகாணத்தில் உம்ரா புனித யாத்திரை செல்வோரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று மெக்காநகரை நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. சவுதி அரேபியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த யாத்ரீகர்கள் அதில் இருந்தனர். இந்நிலையில் மலைகளின் வழியே ஒரு பாலத்தின் மீது அந்தப் பேருந்து செல்லும்போது திடீரென … Read more

கிரீஸ் நாட்டில் உணவு விடுதி மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் கைது!

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மத்தியப் பகுதியில் உள்ள யூதர் உணவு விடுதி மீது தாக்குதல் நடத்த முயன்றதாக பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பலரைக் கொல்ல சதி செய்ததாக அவர்கள் மீது தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இருவரிடமும் விசாரணை நடத்தி வரும் போலீசார், சதியில் தொடர்புடைய மற்றொரு நபர் தேடப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். துருக்கி வழியாக ஊடுருவிய இரு தீவிரவாதிகளும் நான்கு மாதங்களாக கிரீஸில் தங்கி சதித்திட்டம் தீட்டியது … Read more

எச்1பி விசாதாரர்களுக்கு சலுகை அமெரிக்க அரசு தகவல்| US government information on concessions for H1B visa holders

வாஷிங்டன், வேலையை இழக்கும், ‘எச்௧பி’ விசா வைத்துள்ள இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், ௬௦ நாட்களுக்குள் வெளியேற வேண்டியது கட்டாயமில்லை. தொடர்ந்து தங்கியிருக்க மாற்று வழிகள் உள்ளதாக அமெரிக்க குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, எச்௧பி விசா வழங்கப்படுகிறது. இதை, அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடிதம் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக, பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆள் குறைப்பில் ஈடுபட்டு உள்ளன. கடந்த நவம்பரில் இருந்து … Read more

5% வட்டி வசூலிக்கும் சீனா| China charges 5% interest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: பாகிஸ்தான், இலங்கை போன்ற திவாலாகும் நிலையிலிருந்த நாடுகளுக்கு ரூ.20 லட்சம் கோடி சீனா கடனுதவி அளித்துள்ளது. இதற்கு 5 சதவீத வட்டியும் வசூலிக்கிறது. உலக நாடுகள் உடனான வர்த்தக உறவை மேம்படுத்தவதாக கூறி ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியசீனா அதில் இணைந்துள்ள 150 நாடுகளை சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் தன் நாட்டுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருபதாண்டுகளில் அந்த நாடுகளுக்கு ரூ. … Read more

வடகொரியாவில் 653 துப்பாக்கி குண்டுகள் மாயம்.. நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீடு வீடாக சென்று சோதனை!

வடகொரியாவில் ராணுவம் திரும்பப் பெறும்போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து ஒரு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் எல்லையில் அமைந்துள்ள நகரைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து, கொரிய மக்கள் ராணுவத்தின் 7-வது படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தபோது, கடந்த 7ஆம் தேதி  துப்பாக்கி வெடிமருந்துகள் காணாமல் போனது தெரிய வந்தது.  இதுகுறித்து ஆரம்பத்தில் புகார் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 653 தோட்டாக்களை கண்டுபிடிக்க நகரம் முழுவதும் அதிபர் கிம் ஜாங் உன் ஊரடங்கு … Read more

அமெரிக்க அதிபர் பைடனை கிண்டலடித்த சவுதி டிவி| Saudi TV mocked US President Biden

ரியாத்:மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், எம்.பி.சி., என்ற தனியார், ‘டிவி’ சேனல் இயங்கி வருகிறது. இதில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோரை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஞாபக மறதி, சோம்பேறித் தனத்தை சித்தரிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் இருந்தது. விமானத்தில் ஏறும்போது தடுமாறி விழுவது, மேடையில் ரஷ்ய அதிபர் பெயரை மறப்பது, செய்தியாளர் … Read more