அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்! கான்வெண்ட் பள்ளி மாணவர்கள் மூவர் பலி

Shooting In Nashville: டென்னசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் திங்கள்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியதாக போலீசார் கருதிய, சந்தேக நபர் இறந்துவிட்டார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். The Covenant School இல் இந்த அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு நடந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவித்த Metropolitan Nashville காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் சந்தேக நபர் இறந்துவிட்டதாகக் … Read more

அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து சென்ற 73 வயதான சாகச கலைஞர்..!

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சிய கட்டிடங்களுக்கு இடையே பல அடி நீளத்துக்கு கட்டப்பட்ட வயரில் பிரான்ஸை சேர்ந்த 73 வயதான சாகச கலைஞர் பிலிப் பெடிட் நடந்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. நியூயார்க்கில் முன்பு இருந்த இரட்டை கோபுர கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிறு மீது 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து பிலிப் பெடிட் சாதனை படைத்திருந்தார். இதேபோல் பிரான்சில் உள்ள Notre Dame Two towers கட்டிடங்கள், அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி, … Read more

“சிரிப்பூட்டும் வாயு”வை போதைக்காகப் பயன்படுத்தும் இளைஞர்கள்… தடை செய்யப்பட்ட போதைப் பொருளாக அறிவித்தது இங்கிலாந்து அரசு

சிரிப்பூட்டும் வாயு என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவானது தடை செய்யப்பட்ட போதைப் பொருளாக இங்கிலாந்து அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறமற்ற வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் சிறு சிறு குப்பிகளில் அடைத்து விற்கப்படும் இந்த வாயுவை இளைஞர்கள் வாங்கி, அதனை பலூனில் நிரப்பி சிறுக சிறுக முகர்ந்து போதைக்காகவும், பரவச மனநிலைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. நைட்ரஸ் ஆக்சைடை அதிகளவு எடுத்துக் கொண்டாலோ, தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டாலோ தலைவலி, … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 7 வழக்குகளில் ஜாமின்…!

லாகூர், பாகிஸ்தானின் இம்ரான்கானின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கவிழ்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார். தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வரும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை, இம்ரான்கான் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம், போலீசாருக்கு மிரட்டல் விடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் … Read more

ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததோடு, ஒரு குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்தனர். தலைநகர் காபூலில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அருகிலுள்ள வர்த்தக மையத்திற்கு முன்பாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர், ஆப்கன் படைகளால் அடையாளம் காணப்பட்டதாக, அரசு செய்தித்தொடர்பாளர் அப்துல் நஃபி தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அருகே இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Source link

புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக 8 வயது சிறுவனை அறிவித்தார் தலாய்லாமா?| Dalai Lama Names US-Born Boy 3rd Highest Leader In Buddhism: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவை சேர்ந்த 8 வயது சிறுவனை, புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக, அந்த மதத்தலைவர் தலாய் லாமா அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்த சிறுவனுக்கு 10வது கல்க்ஹா ஜெட்சன் தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த 8ம் தேதி நடந்ததாக வெளியாகி உள்ளது. இரட்டையர்களில் ஒருவரான இந்த சிறுவனின் தந்தை அமெரிக்காவில் … Read more

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி

காபுல், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உள்பட பிற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளது. மாலிக் அசார் சதுர்க்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி இன்று உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார். அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்பு படையினர் … Read more

பிக்-அப் டிரக் ஒன்றிலிருந்து கழன்று ஓடிய டயர் மீது கியா கார் மோதி விபத்து..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நெடுஞ்சாலையில் சென்ற பிக்-அப் டிரக் ஒன்றிலிருந்து கழன்று ஓடிய டயர் மீது மோதிய கியா கார், வானில் பல அடி உயரம் தூக்கி வீசப்பட்டது. விபத்தில் சிக்கிய கார் சாலையில், தலை குப்புற விழுந்த காட்சி, பின்னால் வந்த டெஸ்லா காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேமில் பதிவாகியுள்ளது. பல அடி உயரத்திற்கு கியா கார் தூக்கிவீசப்பட்டபோதும், அதில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். Source link

புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைக்க இஸ்ரேல் அதிபர் உத்தரவு| Israels president orders suspension of new judicial reform law

ஜெருசலேம்: இஸ்ரேல் அரசு நிர்வாகம் கொண்டு வந்துள்ள நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் அதிபராக ஐசக் ஹெர்சாக் உள்ளார். இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தலைமையிலான அரசு புதிய நீதித்துறையில் சீர்திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களும் அதிருப்தி வெளியிட்டனர். நிலைமை முற்றியதால் அதிபர் ஐசக் ஹெ ர்சாக் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய சட்டத்தை … Read more

ஊரடங்கு பிறப்பித்த வடகொரிய அதிபர்; கொரோனாவுக்கு அல்ல… துப்பாக்கி குண்டுகளை கண்டறிய..!!

பியாங்யாங், உலகம் முழுவதும் கொரோனா பல அலைகளாக பரவியபோது, பல்வேறு நாடுகளும் மக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தன. ஆனால், கொரோனா பரவல் ஏற்பட்டபோது, தொற்று இல்லாத நாடுகளின் வரிசையில் வடகொரியா இடம் பெற்றது. அந்நாட்டில் கொரோனா பரவலே இல்லை என அரசு பெருமையுடன் கூறி வந்தது. எனினும், 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று பரவியபோது, வடகொரியாவின் ரியாங்காங் வடக்கு மாகாணத்தில் ஹீசான் நகரில் வடகொரியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ராணுவ படைகளை குவித்தது. சீன … Read more