உக்ரைனுக்கு குறைக்கப்பட்ட யுரேனியம் அனுப்புவதை ஆதரித்த இங்கிலாந்து..!

ரஷ்ய அதிபர் புதினின் எச்சரிக்கைக்குப் பிறகு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு குறைக்கப்பட்ட யுரேனியம் வெடிமருந்தை அனுப்புவதை இங்கிலாந்து ஆதரித்துள்ளது. உக்ரைனுக்கு இங்கிலாந்து கவசத் துளையிடும்  வெடிமருந்துகளைக் கொடுத்தால், தக்க பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று புதின் கூறியிருந்தார். இரண்டு டாங்கிகளுடன் கவச-துளையிடும் சுற்றுகளை உக்ரைனுக்கு வழங்குவதாக பிரிட்டன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால்  கதிர்வீச்சு அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.  குறைக்கப்பட்ட யுரேனியமுக்கும் அணு ஆயுதங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் … Read more

“எலான் மஸ்க் பதிலளிக்கும் வகையில் டுவீட் ஒன்றை இயற்றி தா…” – சாட் ஜி.பி.டி.யிடம் கேட்ட டுவிட்டர் பயனர்..!

இணையத்தில் பிரபலமடைந்து வரும் சாட் ஜி.பி.டி. தேடுபொறியால் இயற்றப்பட்ட கேள்விக்கு டுவிட்டர் சி.இ.ஒ. எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். டுவிட்டர் பயனர் ஒருவர், எலான் மஸ்க் பதிலளிக்கும் வகையில் கேள்வி ஒன்றை இயற்றி தருமாறு சாட் ஜி.பி.டி.யிடம் கேட்டுள்ளார். ”எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பிரபஞ்சம் பற்றிய மக்களின் புரிதலை எவ்வாறு மேம்படுத்த போகிறது ?” என கேட்குமாறு சாட் ஜி.பி.டி. பதிலளித்தது. அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்த அந்த நபர், எலான் மஸ்கை … Read more

பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் – ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் ரஷ்யா, சீனா பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. மேலும் உக்ரைன் உடனான போரை சீனாவின் முயற்சிகள் முடிவுக்குக் கொண்டு வரலாம் … Read more

குழந்தைகள், குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!

ஒவ்வொரு முறையும் மாஸ்கோவில் சமாதானம் என்ற வார்த்தையை கேட்க முயற்சிக்கும் போது, அடுத்து ஒரு குற்றவியல் தாக்குதலுக்கு உத்தரவு வழங்கப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். சீன அதிபரின் ரஷ்ய வருகை குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதனை தெரிவித்துள்ளார். இப்போது, சாதாரண மக்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்றும் ஜெலென்ஸ்கி ட்வீட் செய்துள்ளார். ரஷ்யாவை தோற்கடிக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் உலகிற்கு அதிக ஒற்றுமையும் உறுதியும் தேவை. என்றும் … Read more

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை! அதிர்ச்சி கொடுத்துள்ள உகாண்டா!

உலகின் பல முற்போக்கான நாடுகளில் ஓரினச்சேர்க்கை உறவுகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இது குறித்து தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஆப்பிரிக்க நாடான உகாண்டா LGBTQ சமூகத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தில் ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, உகாண்டாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்காவின் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உகாண்டா நாடாளுமன்றத்தில் … Read more

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட 8 லியோபர்டு ரக டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பியது நார்வே..!

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட எட்டு Leopard 2 ரக நவீன போர் டாங்கிகளை, நார்வே உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது. டாங்கிகள், வெடி மருந்துகள் மற்றும் கவச வாகனங்களை விமானம் மூலம் அனுப்பி வைத்த வீடியோவை நார்வே ராணுவம் வெளியிட்டுள்ளது. ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட நவீன போர் டாங்கிகள் தேவைப்படுவதாக உக்ரைன் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஜெர்மனி, போலந்து, போர்ச்சுகல், நார்வே உள்ளிட்ட நேட்டோ நாடுகள், 48 டாங்கிகளை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Source link

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் அலட்சியம் – பிரிட்டன் தூதரகம், தூதர் இல்லத்தில் தடுப்புகள் அகற்றம்: மத்திய வெளியுறவு துறை பதில் நடவடிக்கை

லண்டனில் உள்ள இந்திய தூதரகரத்தின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததற்கு பதில் அளிக்கும் வகையில், டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் பிரிட்டன் தூதரின் இல்லத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை மத்திய அரசு அகற்றியது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் திடீரென நுழைந்தனர். இந்திய தூதரக கட்டிடத்தின் முன்புறம் உள்ள கம்பத்தில் இருந்து மூவர்ணக் கொடியை கீழிறக்கினர். மேலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் கொடியை ஏற்ற முயன்றனர். அதற்குள் … Read more

முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை விட கடந்த ஆண்டில் பெரும் இழப்பை சந்தித்த ஜெஃப் பெசோஸ்..

இந்திய கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரை விட அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், கடந்த ஆண்டில் பெரும் இழப்பை சந்தித்ததாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. ஹூருன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில், அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸின் சொத்தானது 70 பில்லியன் டாலர் சரிவை கண்டு 118 பில்லியன் டாலர் மதிப்பில் முதலிடத்தில் உள்ளது. டெஸ்லா மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ எலன் மஸ்கின் சொத்து மதிப்பு 48 பில்லியன் டாலராக குறைந்து, … Read more

கலிபோர்னியாவில் கடுமையான புயல்.. கரை புரண்டு ஓடும் ஆறுகள்.. ஒரு லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு..

கலிபோர்னியாவில் வீசிய புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் முடங்கிக் கிடக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும் படி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஆறுகள் கரை புரண்டு ஓடுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதலே மத்திய கலிபோர்ணியா மாகாணம் தொடர்ச்சியாகப் புயல்களால் பாதிப்படைந்துள்ளது. சுமார் 14 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 47 ஆயிரம் பேர் வெளியேறும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலத்த சூறைக்காற்று வீசி … Read more