லண்டன் இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி – காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பாடம் புகட்டிய இந்தியா

லண்டன்: பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டிய அம்ரித்பால் சிங் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் இந்திய தூதரகத்தில் நேற்று முன்தினம் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் புகுந்து அங்கிருந்த தேசியக் கொடியை அகற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பணியாற்றும் இங்கிலாந்து தூதரை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வரவழைத்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இதுகுறித்து மத்திய … Read more

கொலம்பியாவில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடானா கொலம்பியாவில் இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பெண் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர். அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் நான்கு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். Source … Read more

ரஷ்யாவில் சீன அதிபர்| Chinese President in Russia

மாஸ்கோ, : ரஷ்யா – உக்ரைன் போர் ஓராண்டை கடந்து தொடர்கிறது. போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. சமீபத்தில் சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக போர் குற்றத்தில் கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் மூன்றுநாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்தார். இன்று இரு தலைவர்களும் … Read more

நகரத்திற்கு ஒரேயொரு மதுபான விடுதி கென்ய துணை ஜனாதிபதி அதிரடி | Kenyas vice-president takes action in the citys only bar

நைரோபி-கென்யாவில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த, நகரத்திற்கு ஒரு மதுபான விடுதியை மட்டுமே அனுமதிக்கும்படி, நகர நிர்வாகங்களுக்கு, அந்நாட்டின் துணை ஜனாதிபதி ரிகாதி கச்சகுவா உத்தரவிட்டு உள்ளார். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், இளைஞர்கள், பொது மக்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், அதிக எண்ணிக்கையில் சட்ட விரோத ‘பார்’கள் இயங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், கென்யாவில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த, நகரத்திற்கு ஒரு மதுபான விடுதியை மட்டுமே அனுமதிக்கும்படி, அனைத்து நகர நிர்வாகங்களுக்கும், அந்நாட்டு … Read more

சோமாலியாவில் கடும் வறட்சி 43,000 பேர் பரிதாப பலி| Severe drought in Somalia kills 43,000 people

நைரோபி-சோமாலியாவில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கடந்தாண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார மையம், ஐ.நா. அமைப்பு மற்றும் பிரிட்டனின் சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருத்துவ மையம் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டன. இதன் விபரம்: சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட … Read more

ரஷ்யா வந்தார் சீன அதிபர் ஷீ ஜின்பிங் கிரெம்ளின் மாளிகையில் உற்சாக வரவேற்பு| Chinese President Xi Jinping arrived in Russia to an enthusiastic welcome at the Kremlin

மாஸ்கோ,-சீன அதிபர் ஷீ ஜின்பிங், மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நேற்று ரஷ்யா வந்தடைந்தார். அவருக்கு, கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உற்சாக வரவேற்பு அளித்தார். கிழக்கு ஐரோப்பியா நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 13 மாதங்கள் ஆகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இதையடுத்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து அதை தனிமைப்படுத்தி உள்ளன. இது, ரஷ்ய அதிபர் … Read more

மகிழ்ச்சி நாடுகள்: பின்லாந்து முதலிடம்| Happiest Countries: Finland tops the list

நியூயார்க்,உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று, மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை, ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய- காரணிகள் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, … Read more

கேம் விளையாடிய மகனுக்கு தண்டனை| Punishment for son who played game

பீஜிங்,: சீனாவில் நள்ளிரவு வரை உறங்காமல் மொபைல் போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய, 11 வயது மகனுக்கு, அவனது தந்தை வழங்கிய நுாதன தண்டனை குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. நம் அண்டை நாடான சீனாவின் குவாங்க்டங் மாகாணத்தில் வசிப்பவர் ஹுவாங். இவரது 11 வயது மகன், தினமும் நள்ளிரவு வரை உறங்காமல் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடியதை பார்த்துள்ளார்.இதையடுத்து, தன் மகன் மீண்டும் விளையாடாமல் இருக்கவும், இந்த விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை … Read more

மெஹுல் சோக்சிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டிஸ் ரத்து; ஒன்றிய அரசுக்கு பெருத்த அடி.!

இந்திய தேசிய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் தொழிலதிபர்களை நாடு கடத்த முடியாமல் இந்திய அரசு திணறி வருகிறது. விஜய் மல்லையா, நீர்வ் மோடி, மெஹுல் சோக்‌சி உள்ளிட்டவர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதில் தோல்வியே இந்திய அரசுக்கு கிடைத்து வருகிறது. மெஹுல் சோக்சி மற்றும் அவரது மருமகன் நிரவ் மோடி ஆகியோர் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியன … Read more