மீண்டும் ஏவுகணை சோதனை – தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா

சியோல்: கொரிய கடற்பகுதியில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஊடக தரப்பில் “கொரிய கடற்பகுதியில் வடகொரியா இன்று காலை ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை பற்றிய கூடுதல் தகவல் இதுவரை தெரியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரத்தில் இரண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க – தென்கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், … Read more

ஆஸ்திரேலியாவிற்கு அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய 3 நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்த அமெரிக்கா

இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில், சீனா ஆதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக, ஆஸ்திரேலியாவிற்கு  அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய மூன்று நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.  கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில், அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் முன்னிலையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை, பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் இணைந்து தயாரிக்க உள்ளன. Source … Read more

பிடியில் சிக்காமல் போக்கு காட்டும் இம்ரான்: கைது செய்ய நீதிமன்றம் தடை| Islamabad court restrains arrest of Imran Khan till March 16 for showing water to police

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூங்கா ஒன்றில் நடந்த பேரணியில், நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு, எதிராக ஜாமினில் வெளி வர முடியாத ‘வாரன்ட்’ பிறப்பித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இம்ரான் கான் … Read more

வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஜோ பைடன்

வாஷிங்டன்: வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் பங்கு விலையும் கடுமையாக சரிந்தது. இதனால் இந்த வங்கி நேற்று … Read more

பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம் மார்ச் 30ல் ஹிந்து அமைப்புகள் பேரணி| Forced conversion in Pakistan Hindu organizations rally on March 30

கராச்சி: பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவது ஹிந்து சிறுமியரை கடத்தி திருமணம் செய்வது போன்ற சம்பவங்களை கண்டித்து வரும் 30ல் ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்வதாகவும் அவர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருவதாகவும் அங்குள்ள ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும் ஹிந்து சிறுமியரை கடத்தி முஸ்லிம்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் … Read more

இங்கிலாந்தில், ஊதிய உயர்வுக் கோரி அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..!

இங்கிலாந்தில், ஊதிய உயர்வுக் கோரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, பணிச்சுமை, ஊதியக்குறைப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தேசிய மருத்துவ சேவையின் மருத்துவ பணியாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் இளநிலை மருத்துவர்கள் என்பதால், அவசரகால மருத்துவச் சேவைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் … Read more

உலகின் வலுவான ராணுவம் : சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேச்சு| The worlds strongest military Chinese President Xi Jinping speech

பீஜிங்: ”சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக, ராணுவத்தை ஒருவரும் அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஷீ ஜின்பிங், அந்நாட்டு அதிபராகவும், ராணுவ தலைவராகவும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தேர்வானார். அந்நாட்டில் அதிபர் பதவி வகித்த கம்யூ., தலைவர் மாசேதுங் உட்பட, வேறு எந்த தலைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் நீடித்தது இல்லை. இந்நிலையில், … Read more

பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு..!

பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரமான மனாஸில் பெய்த தொடர் மழையால், அதிக ஆபத்து மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் சேதமடைந்ததில், இடுபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். Source … Read more