உக்ரைனில் ரஷியா ஏவுகணை மழை: 6 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், வினியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உக்ரைனில் பல பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கிலான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின. 11 பேர் கொல்லப்பட்டனர். ஏவுகணை மழை அதன்பிறகு நேற்று அதிகாலை நேரத்தில் உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புகளை … Read more

5ம் தலைமுறை போர் விமானத்திற்காக அமெரிக்க ராணுவ ரகசியங்களை சீனா திருடி வருவதாகக் குற்றச்சாட்டு..!

சீனா தனது மேம்பட்ட 5ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதற்காக அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களைத் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு கொள்கைக்கான முன்னாள் அதிகாரி பேசும்போது,  சீனாவிடம் தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானம் J-20 இருப்பதாகவும், அந்த விமானத்தின் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இருந்து திருடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆயுத தகவல்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அமெரிக்க ராணுவம் மேலும் சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஜேம்ஸ் தெரிவித்தார். Source link

உக்ரைனில் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்..!

உக்ரைனில் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய கின்ஸல் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் முக்கிய பகுதிகள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையம் அருகே ஒரு ஏவுகணை வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. Source link

சவுதி அரேபியாவில் ‘ரமலான்’ கட்டுப்பாடுகள்! அதிருப்தியில் உலக இஸ்லாமியர்கள்!

ரியாத்: இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மெக்கா மற்றும் மதீனா நாடான சவூதி அரேபியாவில் மார்ச் 22ம் தேதி முதல் புனித மாதமான ரமலான் பண்டிகைக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் மசூதிகளுக்குள் ஒலிபெருக்கிகளின் எண்ணிக்கையை குறைப்பது, நன்கொடைகளை தடை செய்வது மற்றும் மசூதிக்குள் அஸான் ஒலிபரப்பை தடை செய்வது ஆகியவை இதில் அடங்கும். இந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை இஸ்லாமிய விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.  மத்திய கிழக்கு கண்காணிப்பாளரின் … Read more

வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க்கில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு.. 7 பேர் உயிரிழப்பு..!

வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர். இரவு 9 மணியளவில் யெகோவா சாட்சிகள் தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பித்து சென்றதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ள போலீசார், அவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. Source link

சீன அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு..!

சீன அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 14ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய அமர்வில் சீன மக்கள் குடியரசின் தலைவராகவும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சீன மக்கள் குடியரசின் தலைவராக இருந்துவரும் ஜி ஜின்பிங், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மாவோவுக்குப் பிறகு 2 … Read more

நேபாள அதிபராக தேர்வானார் நேபாள காங்.,கின் பவுதெல்| Nepali Congress, Kin Bouthel was elected as the President of Nepal

காத்மாண்டு, நம் அண்டை நாடான நேபாளத்தில் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலில், நேபாள காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திர பவுதெல், ௭௮, பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றார். நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம், வரும் ௧௨ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அதிபர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், பார்லிமென்ட் உறுப்பினர்கள் ௩௩௨ பேரும், ஏழு மாகாண சட்டசபைகளின் ௫௫௦ உறுப்பினர்களும் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில், ௩௧௩ எம்.பி.,க்களும், ௫௧௮ மாகாண … Read more

கின்ஸல் ஏவுகணைகள் ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் கொண்டு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்..!

உக்ரைனில் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய கின்ஸல் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் முக்கிய பகுதிகள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையம் அருகே ஒரு ஏவுகணை வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. Source link

சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்பு| Xi Jinping secures unprecedented third term as China’s president in ceremonial vote

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தொடர்ந்து 3வது முறையாக அந்நாட்டு பார்லிமென்டில் அதிபராக பதவியேற்றார். சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவார். அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி அவரை ஒருமனதாக தேர்வு செய்தது. மேலும், மத்திய ராணுவ கமிஷன் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். சீன … Read more