பீரங்கி பயிற்சியில் விபத்தா? ராணுவ அதிகாரிகள் மறுப்பு!| An accident in artillery practice? Military officials refused!

பாட்னா, ராணுவத்தினரின் பீரங்கி பயிற்சியின் போது இலக்கு தவறி குண்டு விழுந்து மூன்று பேர் பலியானதாக கூறப்பட்ட புகாரை, இந்திய ராணுவம் மறுத்துள்ளது. பீஹாரின் கயா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ராணுவ பயிற்சியின் போது, சிறிய ரக பீரங்கிகள் வாயிலாக குண்டுகள் வீசி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த குண்டுகள் இலக்கு தவறி, அருகில் இருந்த கிராமத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக பலியானதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் … Read more

பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு பேராபத்து; அலாரம் அடிக்கும் ஆய்வறிக்கை.!

பிளாஸ்டிக் நுண் துகள்களால் மனிதனுக்கு பேரழிவு காத்துக் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை அலாரம் அடிக்கிறது. மனிதன் கண்டுபிடித்ததிலேயே பேரழிவை ஏற்படுத்தக்கூடியது அணு ஆயுதம், அதற்கு அடுத்தபடியாக இருக்க கூடியது பிளாஸ்டிக். சுவாசிக்கும் காற்றிலும், உணவிலும், அருந்தும் நீரிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பதாக அலாரம் அடிக்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். இறந்த மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, நாளைடைவில் மனிதர்கள் வயிற்றிலும் சுவாசக் குழாயிலும் வரலாம். 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் உயிரினங்களில் 99% மைக்ரோ பிளாஸ்டிக்குகளை உட்கொண்டிருக்கும் … Read more

ஐநா. மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி..!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் காஷ்மீர் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஜக்ப்ரீத் கவுர் , நியுயார்க்கில் ஐநா.மனித உரிமைக் குழுவின் 52வது கூட்டத்தின் 17வது அமர்வில பேசும்போது, இந்தியா பற்றிய தேவையில்லாத விஷயங்களை பாகிஸ்தான் எழுப்புவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அரசியல் ரீதியான அடக்குமுறைகள் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் மீது ஏவப்படுவதாக குற்றம் சாட்டிய ஜக்ப்ரீத் கவுர், காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் … Read more

104 பயணிகளுடன் மாயமான ரயில்! 100 ஆண்டுகளாக தொடரும் தேடுதல் வேட்டை!

விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். விமானம் அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் எங்கோ காணாமல் போனது. அதன்பிறகு இன்று வரை அந்த விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் நிலை என்ன என கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தாலியில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.இதுவும் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். ஆனால் இந்த முறை விமானம் இல்லை, ரயில் ஒன்று காணாமல் போன சம்பவத்தை அறிந்து கொள்ளலாம். இந்த ரயிலில் சுமார் 104 பயணிகள் … Read more

இனவெறிக்கு உள்ளான இந்திய வம்சாவளி; அமெரிக்காவில் அவலம்.!

இந்திய வம்சாவளி பேராசிரியை இனவெறியால் பதவிகள் இழந்ததாகவும், மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவித்துள்ளார். பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அழித்துவிட்டு, ஐரோப்பிய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் அமெரிக்காவில் குடியேறினர். அதைத் தொடர்ந்து வெள்ளையர்களின் நாடாக அமெரிக்கா ஆனது. அதேபோல் பொது நீச்சல் குளங்களை கருப்பினத்தவர்கள் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல இனவெறி தாக்குதல்களும் அமெரிக்காவில் இருந்துள்ளன. அந்தவகையில் தீவிர வலதுசாரியும், வெள்ளை இனவெறி மிகுந்தவருமான டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றதை தொடர்ந்து அங்கு பல இனவெறி தாக்குதல் நடந்துள்ளன. தனிமனித … Read more

கடல் நீர்மட்டம் உயர்வால் ஆசிய பெருநகரங்களுக்கு ஆபத்து.. இந்தியாவில் மட்டும் 3 கோடிப் பேர் பாதிக்கப்படுவார்கள் எனத் தகவல்..!

கடல் மட்டம் உயர்வதால் ஆசியாவில் உள்ள பெரு நகரங்கள் முன்பு கருதப்பட்டதை விட அதிக ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறை உருகி வருவதால் 2100ம் ஆண்டு வாக்கில், ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று காலநிலை குறித்த இதழான நேச்சர் தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதில் 3 கோடிப் பேர் இந்தியாவில் வசிப்பதாகவும் நேச்சர் இதழில் கூறப்பட்டுள்ளது.  … Read more

தைவானை இணைக்க சீனா அழுத்தம் தரும் – அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தைவான் நாட்டை தன்னுடன் இணைக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் அமெரிக்க உளவுத் துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி அரசு இயந்திரத்தையும் அதிகாரத்தையும் முழுவதுமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தைவானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் அந்த … Read more

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பரிந்துரைக்கு ஆதரவு| Support nomination of US Ambassador to India

வாஷிங்டன் : இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, எரிக் கார்செட்டியை நியமிக்க, 52, அமெரிக்க செனட் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை, 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் இவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த சூழலில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரைக்கு, அரசு அதிகாரங்களில் வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் செனட் குழு ஒப்புதல் அவசியம் என்பதால், இதற்கான … Read more

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில், 6 ஹைப்பர்சோனிக் கின்சல் உள்பட 81 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்..!

ரஷ்யா நடத்திய தொடர் ஏவுகணை தாக்குதல்களால் மேற்கு உக்ரைனில் லிவிவ் பகுதியில் 5 பேரும், கெர்சோனில் 3 பேரும் உயிரிழந்தனர். தலைநகர் கீவ், ஒடேசா, கார்கிவ், கெர்சோன் உட்பட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் கட்டடங்கள், மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. 6 ஹைப்பர்சோனிக் கின்சல் ஏவுகணைகள் உள்பட 81 ஏவுகணைகள் மற்றும் 8 ட்ரோன்கள் மூலம் எரிசக்தி நிலையம் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 10 பிராந்தியங்களில் முக்கிய உள்கட்டமைப்புகள் … Read more

நேபாளம் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் தேர்வு| Nepal elects Ram Chandra Baud as its new president

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நேபாளம் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாளம் அதிபராக இருந்த பித்யா தேவி பணடாரி பதவி காலம் மார்ச் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் நேபாளம் காங்கிரஸ், சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) உள்பட எட்டு கட்சிகள் ஆதரவுடன் ராம் சந்திரா பவுடால் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து சி.பி.எம். (யு.எம்.எல்.) … Read more