தென் கொரியாவில் கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு ஆயிரம் நாய்கள் கொடூர கொலை

சியோல், தென் கொரியாவின் வடமேற்கே அமைந்த கியாங்கி மாகாணத்தில் யாங்பியாங் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை என வீடு, வீடாக சென்று தேடி உள்ளார். அப்படி சென்றதில் வீடு ஒன்றில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வை பார்த்து அதிர்ந்து போனார். இதுபற்றி கேர் என்ற விலங்குகள் உரிமை குழு ஆர்வலர்களுக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து நடந்த சோதனையில் வீட்டின் பின்புறத்தில் கூண்டுகள், சாக்கு பைகள் மற்றும் ரப்பர் … Read more

இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – சீனா மோதல்களுக்கு வாய்ப்பு: அமெரிக்க புலனாய்வு அமைப்பு

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக ஓர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: ”கடந்த 2020-ல் இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் என்பது பல பத்தாண்டுகளில் ஏற்பட்டிராத ஒரு நிகழ்வு. இது இரு நாடுகளுக்கு இடையே கடினமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவும் … Read more

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம்; அமெரிக்க புலனாய்வு அமைப்பு அச்சம்

வாஷிங்டன், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையின் கீழான இந்தியா, கடந்த காலத்தில் இருந்தது போல் இல்லாமல் ராணுவ படை உதவியுடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமுள்ளது என தெரிவித்து உள்ளது. காஷ்மீரில் வன்முறை பரவி … Read more

உக்ரைனின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா தீவிர தாக்குதல்

கீவ்: உக்ரைனின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்ய படை இன்று தீவிர வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில், பல நாட்களுக்குப் பிறகு தீவிர தாக்குதலில் ரஷ்யா மீண்டும் இறங்கியுள்ளது. வியாழக்கிழமை காலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரஷ்ய … Read more

பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் ஆப்கன்: ஐ.நாவின் இந்திய பிரதிநிதி பேச்சு| Afghanistan as a haven for terrorists: Indian UN representatives speech

நியூயார்க்: பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது என ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசினார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசியதாவது: இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான முறையில் 40,000 மெட்ரிக் டன் கோதுமை, 65 டன் மருந்து பொருட்கள் மற்றும் 28 டன் நிவாரணப் பொருட்கள் உட்பட பல உதவிகளை செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது கவலை … Read more

வீட்டு வேலைகளை செய்யவே திருமணம் செய்து கொண்டார்: விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய மனைவி…!

மாட்ரிட், குடும்பம் என்பது கணவன் – மனைவி என இருவரும் உற்சாகமாக மற்றும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சிகரமாக செல்லும். பெரும்பாலும் கணவர்கள் வெளியில் வேலைக்கு செல்வதால், வீட்டிலிருக்கும் பெண்கள் நாள் முழுவதும் அதிக வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. வீட்டில் அதிக வேலைப்பளு காரணமாக சிரமத்தை சந்திக்கும் பெண்கள் தங்கள் கணவர் வீட்டிலிருக்கும் நேரத்திலாவது சில உதவிகளை செய்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள். இதனால் கணவரிடம் சில உதவிகளை அல்லது வேலைகளை செய்ய சொல்லும் போது … Read more

சீனா, ஈரான் உள்பட 4 நாடுகள் அச்சுறுத்தலாக இருக்கும்; அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில், சீனா, ரஷியா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. கிழக்கு ஆசியாவில் முக்கிய சக்தி வாய்ந்த ஒன்றாகவும், உலக அரங்கில் பெரிய ஆற்றல் வாய்ந்த நாடாகவும் சீனா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வளர்ந்து வரும் சக்தியாக உள்ள சீனாவை எதிர்கொள்வதற்கான … Read more

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அவதார் 2 பரிந்துரை..!

உலகம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரி குவித்த அவதார் 2 திரைப்படம், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது அளிக்கும் விழா, அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. 2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அவதார் திரைப்படத்தின் 2ம் பாகமான ‘Avatar: The Way of … Read more

5,000 மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் | கைது நடவடிக்கையை தொடங்கியது ஈரான்

தெஹ்ரான்: சுமார் 5,000 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கைகளில் ஈரான் இறங்கி உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்களின் உடலில் நஞ்சு இருந்தது தெரிய வந்தது. மாணவிகள் பயிலும் பள்ளிகளில் மர்ம … Read more