Yuri Gagarin: முதன்முதலில் விண்வெளி சென்ற யூரி ககாரின்… போராட்டமும் பேரார்வமும் நிறைந்த வீரரின் கதை!

Yuri Gagarin Birthday: இன்று, விண்வெளியில் பயணம் செய்ய, உடல் திறன்களைத் தவிர, பெரிய தகுதி எதுவும் தேவையில்லை என்றாகிவிட்டது. விண்வெளி சுற்றுலா தற்போது யதார்த்தமாகிவிட்டது. இது மிகவும் விலையுயர்ந்ததாகவும் பணக்காரர்களுக்கு சாத்தியமானதாகவும் தெரிகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இது கடுமையான பரிசோதனை மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் இருந்தால்தான் கிடைக்கும். இதற்கும் பயணச் செலவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த வகையில், முதல் விண்வெளி வீரரான ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின், உலகம் வியந்து … Read more

கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி வந்த லாரியைத் மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் வைரல்..!

கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி வந்த லாரியைத் தேடி வந்து மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய சாலை வழியாக செல்லும் ஏனைய வாகனங்களை கண்டுகொள்ளாத அந்த யானை, கரும்புக் கட்டுகளை ஏற்றி வரும் லாரிகளை மட்டும் குறிவைத்து நடுச்சாலையில் நின்று லாரியை மறித்துக் கொள்கிறது. பின்னர் தனக்குத் தேவையான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு அமைதியாக இருந்து விடுகிறது. யானையின் இந்தச் செயல் இணையத்தில் அதிகம் … Read more

இம்ரான்கான் ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு.. தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் போலீசார் நடவடிக்கை..!

பாகிஸ்தானில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான் கான் ஆதரவாளர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் அப்புறப் படுத்தினர்.  இம்ரான் கான் ஆட்சியின் போது கலைக்கப்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட மாகாண சட்டபேரவைகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரச்சாரப் பேரணியை நடத்த திட்டமிட்ட இம்ரான்கான் ஆதரவாளர்கள், லாகூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கூடினர். அப்போது, காவல்துறையினர் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தியபோது, மோதல் வெடித்தது. இதில், இரு … Read more

கருகலைப்பு தண்டனை கனடாவில் நீக்கம்| Abortion decriminalization in Canada

ஒட்டாவா : ‘கனடாவில் கருகலைப்புக்காக தண்டனை பெற்றவர்கள் மீதான குற்றங்கள் நீக்கப்படும்’ என அந்நாட்டு அரசு அறிவித்தது. வட அமெரிக்க நாடான கனடாவில் கருகலைப்புகள் மீதான தடைகள் 1988ல் நீக்கப்பட்டது. ஓரின சேர்க்கையாளர்கள் மாற்று பாலினத்தவர்கள் திருநங்கையர் சந்தித்து நேரம் செலவிட பிரத்யேக விடுதிகள் நடத்துபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வந்தன. இது 2019ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் கருகலைப்பு மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான விடுதி நடத்தியதற்காக தண்டனை பெற்றவர்கள் மீதான … Read more

ஆப்கனுக்கு கூடுதலாக 20 ஆயிரம் டன் கோதுமை – ஈரான் வழியாக அனுப்புகிறது இந்தியா

காபூல்: ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா – மத்திய ஆசிய கூட்டுப் பணிக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ் தான் ஆகிய நாடுகளின் சிறப்புத் தூதர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு பிறகு வெளியான கூட்டறிக்கையில், “ஆப்கன் மக்கள் அனைவரின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்தும் செய்யும் அரசியல் அமைப்பின் அவசியத்தை இந்தக் … Read more

தைவானை இணைக்க சீனா அழுத்தம் தரும் என்று அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தைவான் நாட்டை தன்னுடன் இணைக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் அமெரிக்க உளவுத் துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி அரசு இயந்திரத்தையும் அதிகாரத்தையும் முழுவதுமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தைவானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் அந்த … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா – இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம்

புதுடெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு இந்தியாவே காரணம் என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மக்களின் கொந்தளிப்பால் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினர். அந்தச் … Read more

லண்டனில் நவாஸ் ஷெரீப்பின் ஆடம்பர வாழ்க்கை.. விலை உயர்ந்த பொருட்களை ஷாப்பிங் செய்ததாக கண்டனம்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து நாட்டில் விலை உயர்ந்த பொருட்களை ஷாப்பிங் செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வரும் வீடியோ காட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஐஎம்எப்பிடம் பாகிஸ்தான் கடன் கேட்டு வரும் சூழலில், அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரரான நவாஸ் ஷெரீப்  விலை உயர்ந்த காரில் பயணித்து, லண்டனில் உள்ள கடையில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் குவித்ததாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். Source link