துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் இழப்பு 100 பில்லியன் டாலர் என மதிப்பு

துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்பு 100 பில்லியன் டாலர் இருக்கும் என ஐநா சபை கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் பேசிய ஐநா வளர்ச்சித் திட்ட அதிகாரி லூயிஸா வின்டென், துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தொடர்பாக மதிப்பீடு நடந்து கொண்டிப்பதாகத் தெரிவித்தார். வரும் 16ம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் நடக்கும் நிதி … Read more

பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடம்.. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா. கருத்து..!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லத்தடை, பெண்கள் பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் செல்லத் தடை,  அரசு அலுவலகங்களிலிலிருந்து பணி நீக்கம் என பெண்களை வீட்டிற்குள் முடக்கும் நோக்கத்துடன் தாலிபான்கள் சட்டம் இயற்றிவருவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. கணவர் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்ற பெண்களை, முன்னாள் கணவன்களிடமே தாலிபான்கள் திருப்பிஅனுப்பிவைப்பதால், பல பெண்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். … Read more

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் யார் ? ஜோ பைடன் தீவிரம்| Who is the US Ambassador to India? Jobaidan intensity

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இரிக் கார்சிட்டி நியமனம் தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடந்தது. இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பணியிடம் காலியாக உள்ளது. இதையடுத்து புதிய தூதராக இரிக் கார்சிட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்தார். இவரை தேர்வு செய்ய வேண்டுமெனில் அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இந்நிலையில் இரிக் கார்சிட்டி தூதராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரிக் கார்சிட்டி முன்னாள் … Read more

தென்கொரியாவில், ஆயிரம் நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரன்..!

தென்கொரியாவில் நாய் பண்ணை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரனிடம், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஜோங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வளர்ப்பு நாய் மாயமானதாக போலீசாரிடம் புகாரளித்தார். நாயைத் தேடி போலீசார் அலைந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபரின் வீட்டில் குவியல் குவியலாக நாய்களின் சடலங்கள் இருப்பதை கண்டு, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரித்தபோது, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களை எடுத்துவந்து உணவளிக்காமல் … Read more

ஈரானில் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்; பெற்றோருக்கும் தொடர்பு: அதிர்ச்சி தகவல் வெளியீடு

டெஹ்ரான், ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக பரவியது. இந்நிலையில், அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் கடந்த நவம்பரில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரவலாக நடந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் நகரான குவாம் நகரில் நவம்பரில் தொடங்கிய இந்த நிகழ்வு ஈரானில் … Read more

அமெரிக்கா: மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிபதியாக முதன்முறையாக இந்திய-அமெரிக்கருக்கு பதவி

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முதன்முறையாக இந்திய-அமெரிக்கரான வழக்கறிஞர் அருண் சுப்ரமணியன் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி செனட் நீதிமன்ற கமிட்டி வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக அருண் சுப்ரமணியனுக்கு பணி வழங்கப்படுகிறது. அவர், பொதுமக்களின் வழக்கில் ஒவ்வொரு விசயத்திலும் நேரடியாக விசாரணை மேற்கொள்வார். மத்திய நீதிமன்ற அளவிலான பணியில் அவர் ஈடுபடுவார். இந்த நீதிமன்ற அமர்வில் சேவையாற்ற … Read more

பாக்முட் நகரை ரஷ்ய படைகள் தாக்கி வரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை – ஜெலென்ஸ்கி

பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை என, அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுவரும் உக்ரைன் போரில், பாக்முட் நகரில் மட்டும் தான், 10 மாதங்களுக்கு மேலாக ரஷ்ய படைகளும், உக்ரைன் படைகளும் தீவிரமாக சண்டையிட்டுவருகின்றன. 80 ஆயிரம் பேர் வசித்த பாக்முட் நகரில் தற்போது 5,000 க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். பாக்முட் நகரம் ரஷ்யா வசம் சென்றால், அங்கிருந்தபடி கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களுக்கு … Read more

சிங்கப்பூர்: இந்தியரான யோகா பயிற்சியாளர் மீது 5 இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

சிங்கப்பூர், சிங்கப்பூரில் திலக் ஆயெர் தெருவில் டிரஸ்ட் யோகா என்ற பெயரில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ராஜ்பால் சிங் (வயது 33) என்ற இந்தியர் யோகா பயிற்சியாளராக பணியாற்றி வந்து உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன் வேலையில் சேர்ந்த அவர் மீது 8 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இதுபற்றி அடுத்தடுத்து 5 பெண்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர். இதன்படி, 2020-ம் ஆண்டு ஜூலையில் ராஜ்பால் சிங் பாலியல் … Read more

Comfort Women: ’ஆறுதல் அளித்த’ பாலியல் அடிமைகளை உருவாக்கிய ஜப்பான்! அதிகார துஷ்பிரயோகம்

Second World War And Women: உலகம் முழுவதும், மார்ச் 8 ஆம் தேதி பெண்களுக்கான சிறப்பு நாளாக, சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகவும் பேசப்படும் ஆறுதல் பெண்கள் (Comfort Women). உலகப் போரின் போது அவர்கள் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது பற்றிய கதை இந்த தலைமுறையினருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டிய விஷயம். பெண்களின் உரிமை என்பது உலகில் எந்த நிலையில் இருந்தது என்பதைத் தெரிந்துக் கொண்டால் தான், மகளிர் தினம் … Read more

அல்க்சா லெஃப்ட்டில் திறந்தவெளி நிலக்கரி சுரங்க விபத்தில் 53 பேர் பலி – சீனா அறிவிப்பு

சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் உள்ள அல்க்சா லெஃப்ட்டில் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 22ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 53 பேர் இறந்திருக்கலாம் என்று, சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுரங்கத்தில் நிகழ்ந்த மண்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 2 வாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 53 பேரை மீட்க முடியாததால் அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அறிவித்துள்ள சீனா, மீட்புப்பணிகளையும் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.   Source link