அண்டார்க்டிகாவில் பனி மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாகத் தகவல் – விஞ்ஞானிகள்

அண்டார்க்டிகாவில் கடந்த 6 ஆண்டுகளில் 3வது முறையாக கடல் பனி மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் கடல் மட்டம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல் பனி மிகவும் பிரதிபலிப்பதாலும், வெப்பத்தின் தாக்கம் அங்கு குறைவாக இருப்பதாலும் பனிக்கட்டிகள் உருகுவது கடினம் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள் ஆனால் பனியின் அடியில் ஓடும் நீர் அதனை உருகச் செய்யும் என்று கூறியுள்ளனர். அண்டார்டிகா … Read more

என்னை கொல்ல மீண்டும் முயற்சி நடக்கிறது: பாக்., தலைமை நீதிபதிக்கு இம்ரான் கடிதம்| There is another attempt to kill me, Imrans letter to the Chief Justice of Pakistan

இஸ்லாமாபாத் : ‘என் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, நான் படுகொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் வாயிலாக வேண்டுகள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்த போது, பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் அவருக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அளித்தனர்.அந்த பரிசுப் பொருட்களை … Read more

டிரக் மீது தற்கொலை படை தீவிரவாதி பைக் மோதல் – பாக்.கில் 9 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

கச்சி: பாகிஸ்தானில் போலீஸார் சென்ற டிரக் மீது இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 9 அதிகாரிகள் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவில் இருந்து தென்கிழக்குப் பகுதியில் 120 கி.மீ. தொலைவில் உள்ளது கச்சி மாவட்டம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரமான தாதர் பகுதியில் நேற்று போலீஸ் அதிகாரிகள்டிரக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டிரக்கின் பின்னால் இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் … Read more

விஷம் வைத்தவர்களுக்கு மரண தண்டனை ஈரான் தலைமை நிர்வாகி கொமேனி கொதிப்பு| Death penalty for those who poisoned Irans Supreme Leader Khomeini

துபாய், ”ஈரானில், பெண்கள் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு விஷம் வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்,” என, ஈரானின் தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி தெரிவித்தார். மேற்காசிய நாடான ஈரானில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவியர் பலர் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், … Read more

‘விரைவில் ஜப்பான் அழியப்போகிறது’ – பிரதமர் ஆலோசகர் அலறல்.!

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது தொடர்ந்தால் விரைவில் நாடு காணாமல் போகும் என பிரதமரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்துள்ளது. 2008 இல் எட்டப்பட்ட 128 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில் இருந்து 124.6 மில்லியனாகக் குறைந்துள்ளது, மேலும் வீழ்ச்சியின் வேகம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், 65 அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் விகிதம் கடந்த ஆண்டு 29%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தென் கொரியா குறைவான கருவுறுதல் விகிதத்தைக் கொண்டிருந்தாலும், ஜப்பானின் மக்கள் … Read more

மலேஷியாவில் வெள்ளப்பெருக்கு வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்| People who lost their homes to floods in Malaysia

கோலாலம்பூர், மலேஷியாவில் தொடர் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் ஜோகூர், குளூவாங் உட்பட பல மாகாணங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், தங்கள் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்திற்கு இதுவரை நான்கு பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 3 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசம்

வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின. காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாமில், மியான்மர் ராணுவத்துக்கு அஞ்சி, அந்நாட்டில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா மக்கள் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமில் நேற்று திடீரென பற்றியத் தீ, மளமளவென அங்குள்ள வீடுகளுக்கு வேகமாக பரவியது. இதனால் பல அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்தில் முகாமில் இருந்த 3 ஆயிரம் வீடுகளும், ஒரு ஆரம்ப … Read more

குழந்தை பிறப்பு உயராவிட்டால் நாடே மாயமாகும் அபாயம் உள்ளது| If the birth rate does not increase, the country is in danger of disappearing

டோக்கியோ, ஜப்பானில், மிக வேகமாக குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கப்படவில்லை எனில், இந்த நாடே மாயமாகிவிடும் அபாயம் இருப்பதாக, பிரதமர் புமியோ கிஷிடாவின் ஆலோசகர் தெரிவித்தார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக சரிந்து வருகிறது. கடந்த ஆண்டு, 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், குழந்தை பிறப்பு 8 லட்சமாக உள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்வதற்காக, … Read more

எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் மரத்தில் மோதி விபத்து.. டேங்கர் வெடித்து டிரக் ஓட்டுனர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் மரத்தில் மோதியதில் தீ பிடித்து எரிந்தது. ஃபிரடெரிக்கில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதியதில், டேங்கர் வெடித்து தீ பற்றி எரிந்தது. தீ கொளுந்து விட்டு மளமளவென எரிந்ததில் டிரக் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீ விபத்தால் அப்பகுதியில் இருந்த 6 வீடுகள் மற்றும் 5 வாகனங்கள் சேதமடைந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். Source link

லாலு, மனைவி பிள்ளைகளிடம் விசாரணை!| Investigation of Lalu, wife and children!

பாட்னா:ரயில்வேயில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது, பல்வேறு மோசடி … Read more