உலக செய்திகள்
கொஞ்சம் அந்த பக்கம் பாருங்கள்…!! பாதயாத்திரையில் பயங்கரவாதிகள்: 'திகில்' அனுபவங்களை பகிர்ந்த ராகுல் காந்தி
கேம்பிரிட்ஜ், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது தமிழகம் தொடங்கி, தென்மாநிலங்கள், வடமாநிலங்களை கடந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்கும் பயணம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி இறுதியில் காங்கிரசின் பாதயாத்திரை நிறைவடைந்தது. இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில், ’21-ம் நூற்றாண்டில் கவனிப்பதற்கான பயிற்சியில்’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசும்போது காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட இந்திய … Read more
வெட்டினால் ரத்தம் சிந்தும் மரம்! விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!
மருத்துவ அறிவியல் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், இயற்கையில் தீர்க்க முடியாத மர்மமான பல விஷயங்கள் உள்ளன, அவற்றின் ரகசியங்களும் நன்மைகளும் அதிர்ச்சியளிக்கின்றன. விஞ்ஞானிகளும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சரியப்படுகிறார்கள். வெட்டப்பட்ட பிறகு சிவப்பு நிற இரத்தத்தை சிந்தும் ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து வெளியேறும் திரவம், மனிதர்களின் ரத்தம் போலவே இருக்கும். இம்மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுகின்றனர். ‘செரோகார்பஸ் அங்கோலென்சிஸ்’ மனிதர்கள் வெட்டு பட்டால் … Read more
4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
கொழும்பு, இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளை, உரிமையாளரிடம் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கு விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது. இதனை எதிர்த்து படகின் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதே சமயம் வழக்கு முடியும் வரை படகுகள் விடுவிக்கப்படாது என்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தெரிவித்து … Read more
கொரோனா தோற்றம்… தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்
ஜெனீவா, உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. எனினும், அதற்கு முன்பே, சில ஐரோப்பிய நாடுகளில் கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரசின் இருப்பு கண்டறியப்பட்டது என கூறப்பட்டது. எனினும், அந்த தகவல்கள் பரவலாக வெளிவராத நிலையில், பாதிப்புகளும் காணப்படாத சூழல் இருந்தது. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் சீனாவில், தொற்று கண்டறியப்பட்ட தருணத்தில் பல அலைகளாக … Read more
பள்ளி மாணவிகளுக்கு விஷம் – “எதிரிகளின் சதி திட்டம்” என ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
தெஹ்ரான்: பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தை “எதிரிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம்” என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி விமர்சித்துள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில் நஞ்சு இருந்தது தெரிந்தது. மாணவிகளுக்கு … Read more
உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியது அமெரிக்கா
வாஷிங்டன், உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவிப் பொதியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது தினத்தந்தி Related … Read more
3 நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 19ல் இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
டோக்கியோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனது பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. மார்ச் 19 முதல் மூன்று நாட்களுக்கு இந்தியாவுக்கு வரவிருக்கும் கிஷிடா, இந்த ஆண்டு ஜி-7 மற்றும் ஜி-20 தலைவர்களாக டோக்கியோவும் புது டெல்லியும் இணைந்து செயல்படுவார்கள் என்பதை மோடியுடன் உறுதிப்படுத்த ஆர்வமாக உள்ளதாக நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது. ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் மே மாதம் நடக்கவிருக்கும் … Read more
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி| Crude oil pipeline fire in Nigeria kills 12
அபுசா: நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயிலிருந்து, கச்சா எண்ணெய் திருட முயன்ற போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வந்ததாக தெரிகிறது. அதேபோல் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து மர்மநபர்கள் சட்டவிரோதமாக திருடி வெளி சந்தையில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், நைஜர் டெல்டா மகாணம் மைஹா நகர் வழியாக செல்லும் கச்சா … Read more