மெக்சிகோவில் வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு..!

தென்அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயம் அடைந்ததாக தகவல்  வெளியாகி உள்ளது. மெக்சிகோ-அமெரிக்க எல்லையான நியூவோ லாரெடோ நகரில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர்.  துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். Source link

அமெரிக்காவில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசி வரும் கடும் பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

அமெரிக்காவின் மேற்கு மண்டலத்தில் உள்ள நெவாடா நகரில் வீசி வரும் கடும் பனிப்புயலால் அந்நகரத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பனிப்புயலால் அங்குள்ள தஹோ ஏரி பனிகட்டியாக உறைந்துள்ள நிலையில், நாளை வரையில் அப்பகுதியில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமெனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. Source link

“எங்கள் தலைவர் நித்தியானந்தா துன்புறுத்தப்படுகிறார்” – ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பெண் பிரதிநிதி பேச்சு

ஜெனிவா: ஐ.நா. சபைக் கூட்டத்தில் நித்தியானந்தாவின் ‘கைலாசா’ பிரதிநிதி கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் நித்தியானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டதாக தகவல் வெளியானது. அந்த நாடு … Read more

ஜாலியா ஹாலிவுட் படம் பார்த்தா ஜோலி முடிஞ்சது: வட கொரியாவில் வில்லங்க உத்தரவு| Parents to be sent to labour camp, children to 5-yr jail if found watching Hollywood movies in North Korea

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியாங்யாங்: வட கொரியாவில், ஹாலிவுட் படங்களை பார்க்கும் குழந்தைகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, பெற்றோர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா ஒரு மர்ம பிரதேசமாகவும், இரும்புத்திரை போர்த்திய நாடாகவும் உள்ளது. இங்கு நடக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். இங்கு, அதிபர் கிம் ஜோங் உன் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. தென் கொரியா உள்ளிட்ட அண்டைநாடுகளை … Read more

பாகிஸ்தான் பரிதாபம் | வேலையை இழக்கும் அபாயத்தில் லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக, அந்நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவதால் தற்காலிக பணியாளர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மின்வெட்டு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி எதிராலியாக அந்நாட்டு உற்பத்தித் துறை … Read more

துருக்கி நிலநடுக்க சேதத்தின் மதிப்பு 34.2 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பீடு!

துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக அங்கு 34 புள்ளி 2 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய உலக வங்கியின் இயக்குனர் Humberto Lopez, நாடு எதிர்கொள்ளும் புனரமைப்பு மற்றும் மீட்பு செலவுகள் எதிர்பார்ப்பதை விட இரண்டரை மடங்கு கூடுதலாக இருக்கும் என்றார். துருக்கியில் கடந்த 6ந்தேதி அன்று இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்| Elon Musk Is World’s Richest Person Again

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்ததால், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்சை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்க்கை முந்தி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எலான் மஸ்க் 2வது இடத்தில் இருந்து … Read more

உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் வட கொரியா: விவசாயத்தில் மாற்றம் கொண்டுவர கிம் தீவிரம்

பியாங்யாங்: வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார். வட கொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை. … Read more

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியான நிலையில் 69 பேர் காயம்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு கடந்த 6ம் தேதியன்று ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் பெரும் சேதத்தை சந்தித்தன. இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் தங்களை வீடுகளை இழந்துள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் முடிந்து புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துருக்கியின் மாலத்யா மாகாணத்தில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் … Read more

டிவி சமையல் நிகழ்ச்சியில் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வந்த போட்டியாளர் வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத் பாகிஸ்தானிய சமையல் நிகழ்ச்சியான தி கிச்சன் மாஸ்டரின் வைரலான வீடியோவை பார்த்து நெட்டிசன்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பாகிஸ்தானின் சமையல் நிகழ்ச்சியான தி கிச்சன் மாஸ்டரின் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. சமிஅயல் போட்டியின் போது போட்டியாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள பிரபல கடையிலிருந்து பிரியாணியைக்வாங்கி கொண்டு வந்து உள்ளார். ஆனால் அது நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் போட்டியாளர் வெளியேற மறுத்துவிட்டார். இது குறித்து போட்டியாளர் கூறும் போது நிகழ்ச்சியின் நடுவர்கள் ருசிப்பதற்காக ஒரு … Read more