3 ஆண்டுகளுக்கு பின், வெளிநாட்டினருக்கு விசாக்கள் வழங்க சீன அரசு முடிவு

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நாளை முதல் அனைத்து வகையான விசாக்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 28ம் தேதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட விசாக்கள் செல்லுபடியாகும் என்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா இல்லாத … Read more

வங்கிகள் மூடல் விவகாரம்: பத்திரிகையாளர்கள் கேள்வியை எதிர்கொள்ள முடியாத பைடன்| Asked questions on SVB collapse, President Biden leaves press meet midway

வாஷிங்டன்: வங்கிகள் மூடல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமெரிக்க அதிபர் ஜோடன் பாதியில் இருந்து வெளியேறினார். அமெரிக்க வங்கிகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால்,சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. மற்றொரு வங்கியும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அதிபர் பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வங்கிகள் சரிவு தொடர்பாக அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ” வங்கிகள் சரிவை சந்தித்திருக்கின்றன… நீங்கள் என்ன செய்கிறீர்கள்… என்ன நடந்தது … Read more

பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..! காரணம் என்ன ?

வாஷிங்டன், அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன இந்த நிலையில்,இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் “வங்கிகள் … Read more

இம்ரான் கானை கைது செய்ய தீவிரம்: போலீசார்- தொண்டர்கள் மோதல்| Islamabad police, PTI supporters clash outside Imran residence

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொண்டர்களும் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இம்ரான் கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகாததால், கடந்த மாதம் 28ம் தேதி … Read more

இம்ரான் கானை வரும் 16-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு உத்தரவு..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கான் விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கோர்ட்டு விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். … Read more

பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

போர்ட் மோரெஸ்பை, தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடு வந்தனர். பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கி.மீ. வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.46 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 16 லட்சத்து 43 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 10 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

மீண்டும் ஏவுகணை சோதனை – தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா

சியோல்: கொரிய கடற்பகுதியில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஊடக தரப்பில் “கொரிய கடற்பகுதியில் வடகொரியா இன்று காலை ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை பற்றிய கூடுதல் தகவல் இதுவரை தெரியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரத்தில் இரண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க – தென்கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், … Read more

ஆஸ்திரேலியாவிற்கு அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய 3 நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்த அமெரிக்கா

இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில், சீனா ஆதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக, ஆஸ்திரேலியாவிற்கு  அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய மூன்று நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.  கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில், அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் முன்னிலையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை, பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் இணைந்து தயாரிக்க உள்ளன. Source … Read more

பிடியில் சிக்காமல் போக்கு காட்டும் இம்ரான்: கைது செய்ய நீதிமன்றம் தடை| Islamabad court restrains arrest of Imran Khan till March 16 for showing water to police

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூங்கா ஒன்றில் நடந்த பேரணியில், நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு, எதிராக ஜாமினில் வெளி வர முடியாத ‘வாரன்ட்’ பிறப்பித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இம்ரான் கான் … Read more