40,000 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலை.. முதற்கட்டமாக 2,000 கைதிகள் மாற்றம்..!

எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர். அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுமார் 40 ஆயிரம் கைதிகளை அடைக்கக் கூடிய வகையில் மிகப்பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது. அந்த சிறைச்சாலைக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் கைதிகள், மற்ற சிறைகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். எல் சால்வடாரில் குற்ற வழக்குகளில் சுமார் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை…!

பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அது அவர்களுக்கு இடையேயான 3-வது சந்திப்பு ஆகும். அந்த சந்திப்பில், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு துறையில் கூட்டான ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன. அப்போது, இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இன்று இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, … Read more

இது கி.மு., கரடி… ஏசுவுக்கும் முன்னால் வாழ்ந்தது – பனிக்குள் ஒளிந்திருந்த அதிசயம்

கிழக்கு சைபீரியாவின் உறைந்த பனியில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தற்போதுவரை அப்படியே இருக்கும் ஒரு கரடியின், ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு தீவில் மேய்ப்பர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர், ஒரு விஞ்ஞானிகள் குழுவால் அந்த கரடியின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. “இந்த கண்டுபிடிப்பு முற்றிலும் தனித்துவமானது. ஒரு பழங்கால பழுப்பு கரடியின் முழுமையான சடலம் இது” என்று கிழக்கு சைபீரியாவின் யாகுட்ஸ்கில் உள்ள வடகிழக்கு ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் லாசரேவ் மம்மத் அருங்காட்சியக ஆய்வகத்தின், ஆய்வகத் தலைவர் … Read more

திருமண நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆரின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் நடிகை…!

லாகூர், ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தெலுங்கு திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கீரவானி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடல் மிகவும் பிரபலமாகும். ஆஸ்கருக்கு அடுத்த உயரிய விருது கோல்டன் குளோப் ஆகும். இதனிடையே, சமீபத்தில் கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. … Read more

டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி சேவையை மேலும் விரிவுபடுத்திய Baidu நிறுவனம்..!

சீனாவில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி சேவையை பைது நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. சீனாவின் முன்னணி இணையதள தேடுதல் நிறுவனமான பைது, வூகான் மற்றும் சாங்கிங் நகரில் அப்பல்லோ கோ எனும் பெயரில் ரோபோ டாக்சி சேவையை தொடங்க கடந்த ஆண்டு அனுமதி பெற்றது. இதையடுத்து அந்த சேவையை தொடங்கி வழங்கி வரும் பைது, தற்போது அக்கார்களின் எண்ணிக்கையை 100ஆக அதிகரித்திருப்பதாக கூறியுள்ளது.   Source link

ஓராண்டு நிறைவு… மங்கும் போர் நிறுத்த வாய்ப்புகள்… – உக்ரைனுக்கு மேலும் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா…!

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 367-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, … Read more

உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவு தினத்தை ஒட்டி, ஜார்ஜியா தலைநகரில் பிரம்மாண்ட பேரணி

உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவு தினத்தை ஒட்டி, ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில்(Tbilisi) நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உக்ரைன் அகதிகள் மற்றும் உள்நாட்டு அடக்குமுறையால் நாட்டை விட்டு வெளியேறிய ரஷ்யர்கள், ஜார்ஜியா நாட்டினருடன் இணைந்து, அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடம் முன்பு திரண்டு உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ஜார்ஜியாவில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

இந்திய காதலனை திருமணம் செய்ய 2 நாடுகளை கடந்து வந்த பாக்., பெண்| Pakistani woman crossed 2 countries to marry Indian boyfriend

கராச்சி: சட்டவிரோதமாக இரண்டு நாடுகளை கடந்து வந்து, இந்தியாவில் வசிக்கும் காதலனை திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹைதராபாத் நகரில் வசிப்பவர் சோஹைல் ஜீவானி. இவரது மகள் இக்ரா ஜீவானி, 16. கல்லுாரி மாணவியான இவர் ‘ஆன்லைன்’ வாயிலாக ‘லுாடோ’ என்ற விளையாட்டை ஆர்வமுடன் விளையாடி வந்தார். இந்த விளையாட்டு வாயிலாக நம் நாட்டின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங், 26, என்ற இளைஞருடன் … Read more

உக்ரைன் போரில் சீனா ரஷியா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இல்லை – அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 367-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, … Read more