விமானத்தில் செல்ல, ஓட்டலில் தங்க பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் 

இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகபாகிஸ்தான் அமைச்சர்கள் அலுவலக ரீதியாக பயணம் செல்லும்போது, விமான பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களின் ஊதியத்தையும் குறைக்க பிரதமர்ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமைச்சர்கள், அரசு ஆலோசகர்களின் செலவுகளை 15 சதவீத அளவுக்கு குறைத்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு மீதப்படுத்த பாகிஸ்தான் … Read more

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்கத் தயார் – டென்மார்க்

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக டென்மார்க் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய டென்மார்க் பாதுகாப்புத்துறை அமைச்சர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் 1970 களில் இருந்து 77 F-16 ஜெட் விமானங்களை டென்மார்க் வாங்கியதாகவும், அவற்றில் 30 விமானங்கள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிய மேற்கத்திய நாடுகள் … Read more

இடம் பெயர்ந்த குழந்தைகளுக்காக நிதி திரட்டிய இந்திய மாணவன்| Indian student raised funds for displaced children

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்-ரஷ்யா தொடுத்துள்ள போரால், இடம்பெயர்ந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் பள்ளிச் சிறுவர் – சிறுமியருக்கு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் தன் பெற்றோருடன் போலந்து நாட்டுக்குச் சென்றான். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள போல்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் மிலன் பால் குமார், ௧௦. இவன், கடந்த ஆண்டு உக்ரைன் பள்ளிகளுக்காக நிதி திரட்டினான். … Read more

கியூபாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயால் 2,200 ஏக்கர் வனப்பகுதி நாசம்.. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் வீரர்கள்..!

கரீபிய நாடான கியூபாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். ஹோல்குயின் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை பரவிய காட்டுத் தீ சுமார் 2 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில், பற்றி எரிந்து வருகிறது. கியூபா பாதுகாப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும், வானம் செந்நிறமாகவும் காட்சியளித்தது. Source link

விமானத்தில் முதல் வகுப்பில் பறக்க பாக்., அமைச்சர்களுக்கு திடீர் தடை| Pakistan ministers suddenly banned from flying in first class

இஸ்லாமாபாத்-பாகிஸ்தானில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அரசு முறை பயணத்தின் போது, விமானத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்யவும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களான அரிசி, எண்ணெய், பருப்பு, இறைச்சி, காய்கறிகள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டின் பல மாகாணங்களில் மக்கள் தெருவில் … Read more

சீன அதிபரை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்| President of Ukraine meets Chinese President

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி ஓராண்டு நிறைவுடைந்துள்ள நிலையில் நேற்று ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி, சீன அதிபர் ஜிஜிங்பிங்கை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரிகள் சீன அதிபர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி ஓராண்டு நிறைவுடைந்துள்ள நிலையில் நேற்று ஐ.நா. … Read more

”ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு கூடுதலாக ட்ரோன்கள் வழங்கப்படும்..” – ஆஸ்திரேலியா அரசு..!

உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவியாக உக்ரைனுக்கு கூடுதலாக ட்ரோன்கள் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், உக்ரைனில் படைகளை திரும்பப்பெற்று உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புடினை வலியுறுத்தினார். இதனிடையே, ஓராண்டாக போரை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு ஆதரவாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.  Source link

உக்ரைன் போரால், எரிபொருள், மின்சார கட்டணம் அதிகரிப்பு.. சூப்பர்-மார்க்கெட்களில் காய்கறிகள் வாங்க உச்ச வரம்பு விதிப்பு..!

இங்கிலாந்தில், காய்கறி வரத்து குறைந்ததால், சில சூப்பர் மார்க்கெட்களில் காய்கறிகள் வாங்க உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரால், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்து, விவசாயிகள் காய்கறிகளை சந்தைக்கு கொண்டுவரும் செலவீனங்கள் அதிகரித்தன. விவசாயிகள் காய்கறி சாகுபடியை குறைத்ததால், சூப்பர் மார்க்கெட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு, காய்கறி வாங்க அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியதால் அண்டை நாடுகளிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. Source link

உக்ரைனுக்கு ஆதரவான தீர்மானம் ஓட்டெடுப்பை புறக்கணித்த இந்தியா| India abstains from voting on pro-Ukraine resolution

நியூயார்க்-ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைனுக்கு ஆதரவான தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. கடும் பொருட்சேதம், உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை ஓயவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன; ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைனும், … Read more