இங்கிலாந்து அரசை விமர்சித்த தொகுப்பாளரை பணி இடைநீக்கம் செய்த பிபிசி…!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் செய்தி நிறுவனம் பிபிசி. இந்நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தங்கள் கிளை அலுவலகங்களை திறந்து செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இதனிடையே, பிபிசி செய்தி நிறுவனத்தின் விளையாட்டு பிரிவு தொலைக்காட்சியில் (பிபிசி ஸ்போர்ட்ஸ்) பிரபலமான நிகழ்ச்சி ‘மேட்ச் ஆப் தி டே’. இது கால்பந்து போட்டி தொடர்பாக வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை ஹெரி லிங்கர் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இங்கிலாந்து அரசின் புதிய அகதிகள் கொள்கை குறித்து ஹெரி லிங்கர் … Read more

ஈரான்-சவுதி அரேபியா இடையே மீண்டும் தூதரக உறவு

பீஜிங், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ஷியா பிரிவு மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஷியா பிரிவினர் அதிகம் வாழும் ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இதற்கு பழிவாங்கும் விதமாக ஈரானில் உள்ள சவுதி அரேபியா தூதரகங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது இருநாடுகள் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து ஈரானுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்தது. இந்த நிலையில் … Read more

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய மெராபி எரிமலை – பொதுமக்கள் வெளியேற்றம்

ஜகார்தா, இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு, யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் , 2,968 மீட்டர் (9,721 அடி )உயரமுள்ள மெராபி எரிமலை, நள்ளிரவு வெடித்துச் சிதறியது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, … Read more

எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்..!

அமெரிக்காவிலுள்ள எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்களும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின், அறிவியல் இதழிலில் வெளியாகியுள்ள கட்டுரையில் எலிகளிடம் சார்ஸ் கோவிட்-2 (SARS-CoV-2) வகையைச் சேர்ந்த ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் ஆகிய வைரஸ்கள் இருப்பதாகவும், ஆய்வு செய்யப்பட்ட 79 எலிகளில் 13 எலிகளிடம் கொரோனா வைரஸ் தாக்கத்தை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எலிகளிடமிருந்து மனிதருக்கு கொரோனா பரவியதா என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லையெனவும், எலிகளை எவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கியது என்பது குறித்து தொடர்ந்து … Read more

சிலிகான் வேலி வங்கியை வாங்கும் திட்டத்தில் எலான் மஸ்க்?

கலிபோர்னியா: அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான, சிலிகான் வேலி வங்கி (எஸ்விபி) திவாலானது. அந்த வங்கியின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்தது இதற்கு காரணம். அதனால் அந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், அந்த வங்கியை வாங்கும் திட்டத்தில் தான் இருப்பதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க கேமிங் நிறுவனமான ரேசரின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மின்-லியாங் டான், திவாலான சிலிகான் வேலி … Read more

பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிராக ஏராளமானோர் நாடு தழுவிய போராட்டம்!

பிரான்ஸில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-லிருந்து 64-ஆக உயர்த்தும் சட்டமசோதாவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதிபர் இமானுவேல் மேக்ரனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தால் பிரான்சில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தலைநகர் பாரீஸில் நடைபெற்ற 7வது நாள் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர், இளைஞர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முகமூடி அணிந்து பட்டாசுகளை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடிக்க … Read more

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவன் கைது| A student who crawled into the school with a gun was arrested

போர்ட்லாண்ட்:அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 10 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் மேனே மாகாணத்தில் மன்றோ என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும், 10 வயது மாணவன் ஒருவன், துப்பாக்கியுடன் வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பள்ளிக்கு சென்ற போலீசார், வகுப்பாசிரியர் உதவியுடன் அம்மாணவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் வந்த மாணவனை, பள்ளியில் இருந்து நீக்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்பின், சம்பந்தப்பட்ட மாணவனை போலீசார் கைது செய்தனர். … Read more

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்

67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு, சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. டிரினிட்டி என்றழைக்கப்படும் இந்த டைனோசர் எலும்புக்கூடு அடுத்த மாதம் 18ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ஏலம் விடப்படவுள்ளதாக ஏல நிறுவனமான கொல்லர் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல்முறை என்றும், 60 முதல் 80 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. Source link