துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க அந்நாட்டு அரசு முடிவு

துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 47 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பகுதி ஊதியம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டுதல் மற்றும் உள்கட்டமைப்புகளை … Read more

நடப்பு ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரை – நோபல் நிறுவனம்

நடப்பு ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305  பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உள்ளிட்டோர் இந்த ஆண்டுக்கான அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களில் பட்டியலில் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு அதிகபட்சமாக 376 நபர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. Source link

விளையாட்டில் தோல்வியடைந்தபோது பார்வையாளர்கள் சிரித்ததால் ஆத்திரம்… 12 வயது சிறுமி உள்பட 7 பேர் சுட்டுக் கொலை

பிரேசிலில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததற்காக ஒரு வீரரைப் பார்த்து சிரித்த 12 வயது சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக இருமுறை தோல்வியடைந்தார். இதனால் அங்கிருந்த சிலர் அவரைப் பார்த்து சிரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பருடன் வந்து கிளப்பில் இருந்த 7 பேரை சுட்டுக் கொன்றார். Source link

ஐ.நா. பொதுச் சபையில் இன்று கொண்டு வரப்படும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் – இந்தியாவுக்கு உக்ரைன் அரசு கோரிக்கை

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டு நாளையுடன் ஒராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் அமைதியை உறுதி செய்து உக்ரைனின் சுதந்திரத்தை காக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் இன்று கொண்டு வரப்படுகிறது. இதுவரை உக்ரைன் விவகாரம் தொடர்பாக, ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் வாக்கெடுப்புகளில் பங்கு கொள்ளாமல் இந்தியா விலகியிருந்தது. இந்நிலையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என இந்தியாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அலுவலகத்தின் தலைவர் … Read more

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை குறைகூற முடியாது – ஜெர்மனி

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கும் முடிவிற்கு இந்தியாவைக் குறை கூற முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன், ரஷ்யா, உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா பொருத்தமான நாடு என்று குறிப்பிட்டார். ஆனால் தற்போதைய சூழ்நிலை அவ்வாறு இல்லை எனவும், போரை நிறுத்த இந்தியா பேச்சு நடத்துமானால் அதனை இரு நாடுகளும் கேட்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என அக்கர்மேன் குறிப்பிட்டா Source link

சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி… சுரங்க இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 50-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மங்கோலியாவின் உள் பகுதியில் அமைந்துள்ள அலக்ஸா லெஃப்ட் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் உள்ளே சிக்கியிருக்கக் கூடுமென அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  … Read more

Earthquake In China: சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

Earthquake In China: சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியிலும், தஜிகிஸ்தான் எல்லை பகுதியிலும் இன்று (பிப். 23) காலை 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதாக சீனா பூகம்ப வலையமைப்பு மையம் (CNC) தெரிவித்துள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. #BREAKING Preliminary results showed that a magnitude-7.3 earthquake … Read more

பிரேசிலில் திருவிழாவின் போது இரும்புப் பாலம் அறுந்து விழுந்து விபத்து

பிரேசிலில் திருவிழாவின் போது இரும்புப் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆற்றில் விழுந்தனர். டோரஸ் என்ற இடத்தில் நடைபெற்ற திருவிழாவைக் காண அதிகாலை நேரத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த சிறிய இரும்புப் பாலத்தில் நின்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் இரும்புக் கயிறுகள் திடீரென அறுந்து விழுந்தன. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த 100 பேர் ஆற்றுக்குள் விழுந்தனர். இதனைக் கண்ட மீட்புப் படையினர் அவர்களை மீட்டனர். ஆயினும் 3 பேரைக் … Read more