”சோகம் சூழ்ந்த முகாமில் சில நிமிடம் சிரிப்பலை..” நிவாரண முகாமில் சிறுமிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..!

துருக்கி நிலநடுக்கத்தில் வீட்டை இழந்து, முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 5 வயது சிறுமியை, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட வைத்து தன்னார்வலர்கள் உற்சாகப்படுத்தினர். அதே முகாமில் தங்கியிருந்த மற்ற சிறார்களுக்கும் இனிப்புகளையும், பொம்மைகளையும் அளித்தனர். நிலநடுக்கத்தின் அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீள முடியாதவர்களுக்கு மன நல மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். Source link

‘இனிமேல் உளவு பலூன்கள் பறந்தால்..’ – சீனாவை நேராக மிரட்டிய அமெரிக்கா.!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அருகில் பெரிய பலூன் ஒன்று பறந்தது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அமெரிக்காவை உளவு பார்க்க சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் என அமெரிக்கா கூறியது. அதுமட்டுமின்றி பலூனில் சென்சார், கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலூனாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதை தொடர்ந்து அந்த வெள்ளை பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் அலாஸ்கா … Read more

Turkey: 13 நாட்களுக்கு பின் இடிபாடுகளில் புதையுண்ட கணவன் மனைவி உயிருடன் மீட்பு!

Turkiye Earthquake: துருக்கியில் பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல, உயிருடன் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இருப்பினும், மீட்புப் பணியின் போது பல அதிசயங்கள் நிகழ்கின்றன, யாராலும் நம்ப முடியாத சம்பவங்கள் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் புதையுண்ட கணவன் மனைவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர் தனது குழந்தையை இழந்தாலும். நிலநடுக்கம் ஏற்பட்டு … Read more

மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா

சியோல்: எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள தென்கொரிய ராணுவம், “இன்று அதிகாலை 5.21 மணிக்கு வடகொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணை 900கிமீ பயணித்து ஜப்பன் கடலில் விழுந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து வரும் மார்ச் மாதம் கடற்படை பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. கொரிய தீபகற்பப் பகுதியில் தங்களுக்கு உள்ள பலத்தைக் காட்டும் நோக்கில் இந்த பயிற்சிக்கு … Read more

சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உள்பட 15 பேர் உயிரிழப்பு..!

சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், 15 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டமாஸ்கஸில், உளவுத்துறை தலைமை அலுவலகமும், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளும் வசிக்கும் பகுதியிலுள்ள 10 மாடி கட்டடம் மீது அதிகாலை ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கட்டடம் பலத்த சேதமடைந்தது ராணுவ வீரர் ஒருவர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். சிரிய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் Hezbollah அமைப்பினரை குறிவைத்து கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை இஸ்ரேல் … Read more

நியூசிலாந்தில் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு..!

நியூசிலாந்தில் கேப்ரியல் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  நியூசிலாந்தின் வடக்குத்தீவு பிராந்தியங்களை, கடந்த 12-ஆம் தேதி தாக்கிய புயலுக்குப்பின், 6 ஆயிரத்து 431 பேரை காணவில்லை என்றும், 3 ஆயிரத்து 216 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார். வெள்ளத்தால் ஏராளமான விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், மழைநீர் மற்றும் சகதி காரணமாக சரக்குப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு … Read more

உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என விருப்பம் – பிரான்ஸ் அதிபர் மேக்ரன்

உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் தோல்வியால் ரஷ்யா நசுக்கப்படுவதை பார்க்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். உக்ரைன் தனது நிலைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் மேக்ரன் தெரிவித்தார். உக்ரைனுக்கு ராணுவ ஆதரவை அதிகரிக்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளை வலியுறுத்திய மேக்ரன், நீடித்த போருக்குத் தான் தயாராக இருப்பதாகவும் கூறினார். Source link

''பாகிஸ்தான் திவாலாகிவிட்டது'' – வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிப்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது என்றும், திவாலாகிவிட்ட ஒரு நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முமகத் அசிப் தெரிவித்துள்ளார். இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. சென்ற மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5% ஆக உயர்ந்தது.வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30% முதல் 50% வரை அதிகரித்தது. தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை 250 ரூபாய்க்கும், இறைச்சி … Read more