பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பில்கேட்சிடம் சாட்போட் மூலம் நேர்காணல்..!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மைக்ரோ சாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோரிடம் சாட்போட் மூலம் நேர்காணல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொழில்நுட்பம், வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. சாட்போட் என்பது மனிதரை போலவே வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கான கம்ப்யூட்டர் புரோகிராம். இதில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சாட்போட் செயலிகள் இகாமர்ஸ், வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம், உலகம் மிகவும் திறமையானதாக மாறவும், சுகாதாரம் … Read more

சிரியாவில் தாக்குதல் | 53 பேர் பலி; ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீது அரசு குற்றச்சாட்டு

டமஸ்கஸ்: சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், “அல்-சோக்னா நகரின் தென்மேற்கில் உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ் பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. இதில் 53 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பால்மைரா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பலியானவர்களின் உடல்களில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

சிட்னியில் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீசுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிட்னியில் அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸை சந்தித்தார். அப்போது ஆண்டனி அல்பானீஸ், தனது இல்லத்தோட்டத்தில் இருந்து தெரியும் முக்கிய இடங்களை, ஜெய்சங்கருக்கு காண்பித்தார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா நடப்பாண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளதாகவும், கொரோனா தொற்றின் சிரமங்களை இந்தியா வெற்றிகரமாக கையாண்டதாகவும் தெரிவித்தார். ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் … Read more

ஒரே மின்னஞ்சல்… 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்

வாஷிங்டன், உலகெங்கிலும் உள்ள டெக் நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 453 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளது, கூகுள் நிறுவனம். கடந்த மாதம் 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது 453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம். தினத்தந்தி Related Tags : கூகுள் பணிநீக்கம் Google … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு | 6 பேர் பலி; ஜனவரி தொடங்கி இதுவரை 73 சம்பவங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள டேட் கவுண்டியில் உள்ள அர்கபுட்லா அணை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அப்பகுதியில் கடையில் இருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் வீட்டில் இருந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.அவரது கணவருக்கு இதில் காயம் ஏற்பட்டது. மொத்தம் 6 பேர் இந்த சம்பவத்தில் … Read more

உலகம் முழுவதும் களைகட்ட தொடங்கிய கார்னிவல் திருவிழா..!

உலகம் முழுவதும் கார்னிவல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் கார்னிவல் திருவிழாவையொட்டி, வண்ண வண்ண ஆடைகளில் சாலைகளில் திரண்ட பொதுமக்கள் மற்றும் நடனக்கலைஞர்கள், ஆடல், பாடல், கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர். வெனிசுலாவிலும் கார்னிவல் திருவிழா களைகட்டியுள்ளது. பாரம்பரிய மற்றும் ஆடம்பரமான ஆடைகளில் நகரின் வீதிகளில் திரண்ட பொதுமக்கள் ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின்போது குழந்தைகள் சாம்பா நடனமாடி மகிழ்ந்தனர். Source link

இந்தியாவில் காலனித்துவ முறையிலிருந்து மாற்றம்: ஜெய்சங்கர் பேச்சு| “Shift from earlier Colonial patterns”: EAM on change in India’s foreign trade

சிட்னி: இந்தியாவில் காலனித்துவ முறையில் இருந்து பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு ‘ரைசினா @ சிட்னி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்பதை உறுதியுடன் கூறுவேன். அதேபோல், அமெரிக்காவின் எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1960,80, 2005களில் நாம் கையாண்ட அதே அமெரிக்க அல்ல நாம் உண்மையில் … Read more

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்: 53 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளை குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், … Read more

அமெரிக்காவில் 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்த நபர் கைது..!

அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணாத்தில் TATE County எனுமிடத்தில் சரமாரியாக துப்பாக்கியால் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கைது செய்தனர். ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பல்பொருள் கடைக்குள் புகுந்த ஒருவர் சுட்டதில் அங்கு ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று ஒரு தம்பதியரும் அந்த நபரால் சுடப்பட்டனர். இதில் மனைவி உயிரிழந்தார். கணவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் சந்தேகத்திற்குரிய நபரின் வாகனத்தைப்பின் தொடர்ந்து விரட்டிய போது மேலும் 4 பேரின் … Read more

பாகிஸ்தான்: போலீஸ் அலுவலக வளாகத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தான் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் கராச்சி துறைமுகத்தில் உள்ள போலீஸ் வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அலுவலக கட்டிடத்தின் வழியாக தரையிறங்கி பல மணிநேரம் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார், ஒரு ரேஞ்சர் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்” என்று சிந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார், மேலும் 14 பேர் காயமடைந்தனர். தொடர் … Read more