துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது..!

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கியில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 187 என அறிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி தவித்தவர்களின் குரல்களை கேட்டபோது தாங்கள் மகிழ்ச்சியுடன் ஓடோடி சென்று அவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டதாக சுரங்கத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே 248 மணி நேரத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி தவித்த 17 வயது சிறுமி மீட்கப்பட்டதாக துருக்கி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, துருக்கி சென்றுள்ள நேட்டோ பொதுச்செயலாளர் … Read more

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.272

இஸ்லாமாபாத்: பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது. இது அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்துள்ளதால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தான் கூடுதல் கடனுதவி கேட்டுள்ளது. இதற்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதால், அவற்றை பாகிஸ்தான் அரசு பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதற்காக கூடுதல் நிதி மசோதாவை பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் நேற்று முன்தினம் தாக்கல் … Read more

பாகிஸ்தானில் நெய் விலை சர்ச்சையில் இம்ரான் கான்| Imran Khan in ghee price controversy in Pakistan

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப் படுவதாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியதை அடுத்து, சமூக வலைதளங்களில் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: பாகிஸ்தானின் … Read more

டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தோடு, 3 பேர் காயமடைந்தனர். எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள், அங்குள்ள ஃபுட் கோர்ட் மற்றும் டிலார்ட் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் ஒருவனை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றொருவன் வெளியில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது வணிக வளாகம் மூடப்பட்டு அங்கு … Read more

மூளை செல்கள் பாதிப்பு நோயால் அவதியும் ஹாலிவுட் நடிகர்| Hollywood actor suffering from brain cell damage disease

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ், மூளை செல்கள் பாதிப்பு நோயால் அவதியுறு தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புரூஸ் வில்லிஸ்,66, இவரது நடிப்பில் வெளியான ‘டைஹார்ட் ‘ சீரியல் படங்கள் பெரும் வெற்றி பெற்றன.பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக 2022-ல் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் நேற்று இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது,புரூஸ் வில்லிஸ் மூளை பாதிப்பு நோயால் … Read more

இந்தியா – பிஜி உறவு ஜெய்சங்கர் நம்பிக்கை| India – Fiji relationship Jaishankar hopes

சுவா;”இந்தியா – பிஜி இடையேயான நட்புறவு தொடரும். பிஜியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில் பெருமைப்படுகிறோம்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். தென் பசிபிக் நாடான பிஜியில், ௧௨வது உலக ஹிந்தி மாநாடு நடக்கிறது. இதை, நம் வெளியுறவு அமைச்சகம் பிஜி அரசுடன் இணைந்து நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிஜி சென்றுள்ளார். தலைநகர் சுவாவில் நேற்று அந்நாட்டின் பிரதமர் சிடிவேனி லிகமமடா ருபேகாவை அவர் … Read more

ரூ.82 கோடி பரிசு அறிவிக்கப்பட்டவர் அல் குவைதா அமைப்பின் புதிய தலைவர்| Rs 82 crore bounty announced is the new leader of Al-Quaida

துபாய் :அமெரிக்க அரசால், ௮௨ கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி சயீப் அல் அதீல், ௬௨, ‘அல் குவைதா’ அமைப்பின் புதிய தலைவராக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல நாடுகளிலும் செயல்பட்டு வரும் அல் குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த அய்மான் அல் ஜவாஹிரி, கடந்தாண்டு ஆக.,ல் அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பல பயங்கரவாத … Read more

ஆஸி., காளி கோவிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்| Aussie, Terrorist threat to Kali temple

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் உள்ள காளி மாதா கோவிலுக்கு, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இவர்கள் வட அமெரிக்க நாடான கனடா ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோவில்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற காளி மாதா கோவிலுக்கும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் … Read more

வங்கிகளிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகளை கண்டித்து வாடிக்கையாளர்கள் ரகளை..!

லெபனானில், வங்கிகளிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கண்டித்து, வாடிக்கையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வங்கி வாசலில் டயர்களை எரித்தும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். டாலருக்கு நிகரான மதிப்பில், லெபனான் நாணயம் 98 சதவீதம் சரிவை கண்டு, கடும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியிருப்பதால், வங்கிகள் தன்னிச்சையாக செயல்பட்டு, பணத்தை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருப்பது, வாடிக்கையாளர்களை கொதிப்படைய செய்துள்ளது. Source link