”புடினுக்கு எதிரான உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது..” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!

உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தபட்டது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ உரையில், நாடு கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை விட அதிகமாக இருக்கலாம் என தெரிவித்தார். இதேபோல், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிர் ஜோ பைடன், புடினுக்கு … Read more

அமெரிக்க ட்ரோனை வீழ்த்திய இரு ரஷ்ய விமானிகளுக்கு விருது..!

கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்திய இரு ராணுவ விமானிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் விருதுகளை வழங்கினார். ரஷ்யா – உக்ரைன் எல்லை அருகே அமெரிக்காவின் டிரோனை ரஷ்யப் போர் விமானம் அழித்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும், சர்வதேச வான்வெளியில் உளவு டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டது. அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது விபத்தை ஏற்படுத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துவரும் நிலையில், அமெரிக்க ட்ரோனை இடைமறித்ததாக இரு விமானிகளுக்கு ரஷ்ய … Read more

ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!

ஆஸ்திரேலியாவின் மெனிண்டீ நகருக்கு அருகே உள்ள ஆற்றில் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து தண்ணீரில் மிதந்துள்ளன. சிட்னிக்கு மேற்கே ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெனிண்டீ நகரில் இருக்கும் டார்லிங் ஆற்றில் 10 லட்சம் மீன்கள் வரை இறந்துள்ளன. மோசமான நீரோட்டம், மோசமான நீரின் தரம், திடீர் வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் மீன்கள் இறந்ததாகவும், ஆக்ஸிஜன் அளவுகளும் மீன்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதே பகுதியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் அதிகளவில் மீன்கள் இறந்து … Read more

வூஹான் உணவு சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதா.?

சீனாவின் வூஹான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் (raccoon) நாய்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதற்கான மரபணு சான்றுகள் உள்ளதாக, சர்வதேச நிபுணர்கள் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அடுத்தசில மாதங்களில் உலகம் முழுதும் பரவியது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடி யாமல் விழி பிதுங்கியது. இந்நிலையில், கொரோனா … Read more

”வடகொரிய அணு ஆயுதம் 33 நிமிடங்களில் அமெரிக்காவைத் அழிக்கும்.?” – சீன நிபுணர்கள் கருத்து..!

வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 நிமிடங்களில்  அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள ராணுவ பாதுகாப்பு விஞ்ஞானிகள் வடகொரியாவின் ராணுவ திறன்கள் குறித்து ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஜப்பான் எல்லையில், அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்த்தது. அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பு இதுபோன்ற ஏவுகணைகளை இடைமறிக்கத் தவறினால், 1,997 வினாடிகளில் அமெரிக்காவைத் தாக்க முடியும் என சீன … Read more

சிஸ்டர் சிட்டி ஊழல் – அமெரிக்காவில் 30 நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா.?

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30 க்கும் மேற்பட்ட நகரங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா என்ற தனிநாடு பெயரில் அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நித்யானந்தாவின் சிஷ்யைகள் பங்கேற்றுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கைலாசாவுடன், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம், கலாசார ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிஸ்டர் சிட்டி என்ற … Read more

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச நீதிமன்றம் உத்தரவு…!

உக்ரேனிய குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தபட்டது உள்ளிட்ட போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நெதர்லாந்திலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரை னின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக குழந்தைகள் உள்பட அனைத்து மக்களையும் நாடுகடத்திய போர்க்குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் ஆகியோருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.  Source link

பிரேசிலில் என்ஜின் செயல் இழந்ததால் பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்ட குட்டி விமானம்…!

பிரேசில் நாட்டில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகும் முன்பாக பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்டதால் அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் செயல் இழந்த பின்னர் விமானம் குறைந்த பட்ச உயரத்தை எட்டியதை அறிந்த விமானி,  பாராசூட்டை பயன்படுத்தி தரையிறக்கினார்.  குட்டி விமானத்தில் பயணித்த பச்சிளம் குழந்தை , 3-வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் காயமின்றி உயிர் தப்பினர். Source link

ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கைது வாரன்ட்| Arrest warrant against Russian President Putin

மாஸ்கோ-உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ‘வாரன்ட்’ பிறப்பித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த சண்டையின்போது, உக்ரைனில் இருந்த பல குழந்தைகளை ரஷ்ய அதிபர் புடின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்த விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, புடினுக்கு எதிராக கைது வாரன்ட் … Read more

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா செல்கிறார் சீன அதிபர் ஜின்பிங்..!

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நாளை மறுநாள் (March 20) ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஷி ஜின்பிங், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அரங்கில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டாண்மை, வியூக ரீதியான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க இருப்பதாகவும், முக்கிய இருதரப்பு ஆவணங்களில் ரஷ்ய அதிபர் புடினும், ஷி-யும் … Read more