இராக் மக்களுக்கு ஐ.நா. எப்போதும் உறுதுணைபுரியும்: அண்டோனியா குத்தரெஸ்

பாக்தாத்: ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இராக் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இராக் பயணம் குறித்து அண்டோனியா குத்தரெஸ் பேசும்போது, “இராக் மக்கள் மற்றும் அதன் அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் உறுதுணைபுரியும். இராக்கியர்கள் அவர்களது சிரமங்களையும் சவால்களையும் பரந்த, ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் எதிர்கொள்ள முடியும் ” என்று கூறியிருக்கிறார். இவர் தனது இராக் பயணத்தில், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஓர் அங்கமாக இன்று … Read more

ஹாங் காங் மாடல் துண்டு துண்டாக வெட்டி கொலை; தலையை வேகவைத்த கொடூரம்.!

ஹாங் காங் மாடலான அப்பி சோய், உலக அளவில் பிரபரலமானவர். இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்ட சோய் கடந்த பிப்ரவரி 21ம் தேதி காணமால் போனார். அதைத் தொடர்ந்து அவர் கொடுரமாக கொலை செய்யப்பட்டது அம்பலமானது. மாடல் அப்பி சோயின் தலை மற்றும் பல விலா எலும்புகள் ஹாங் காங்கின் கடலோர கிராமமான லுங் மேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் பானை மற்றும் குளிர்சாதன பெட்டியில் காணப்பட்டன. அங்கு மின்சார ரம்பம் … Read more

ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர் சுட்டுக்கொலை: நீதிமன்றத்தில் வழக்கு| Tamil Nadu youth shooting in Australia: Case in court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், தமிழக இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால், துாய்மை பணியாளர் ரத்தக்காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அந்த இளைஞர் கத்தியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். அங்கு சிட்னி போலீசாரை தாக்க முயன்றதாக … Read more

எப்போதுமில்லா உயர்வு | பாகிஸ்தானில் பிப்ரவரி மாத பணவீக்கம் 31.6% ஆக உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பணவீக்கம் முன் எப்போதுமில்லாத அளவாக பிப்ரவரி மாதத்தில் 31.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இறக்குமதி மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், பல்வேறு பொருட்களின் விலையும், சேவைக் கட்டணமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கராச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் பிரபல வணிக நிறுவனமான ஆரிப் ஹபிப் கார்பரேஷன், பாகிஸ்தானின் நுகர்வோர் விலை குறையீடு குறித்த புள்ளி விவரங்களை … Read more

வெளிநாட்டினருக்கு ஹாங்காங் செல்ல 5 லட்சம் இலவச விமான டிக்கெட்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அறிவித்துள்ளது. இதற்காக, தங்கள் நாட்டிற்குள் வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தியுள்ள ஹாங்காங் அரசு, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இச்சலுகையை அறிவித்துள்ளது. இதற்காக, கொரோனா காலத்திலேயே விமான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி விட்டதாக தெரிவித்துள்ள ஹாங்காங், தங்கள் நாட்டிற்கு வருவோர் குறைந்தபட்சம் 2 … Read more

கரோனா எங்கிருந்து பரவியது?- அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு விளக்கம்

நியூயார்க்:கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கரோனா வைரஸ் உலக முழுவதிலும் பரவ தொடங்கியத்திலிருந்தே, கரோனா வைரஸின் உருவாக்கம் குறித்து குழப்பமான பதில்களே சுற்றி வந்தன. இந்த நிலையில் அமெரிக்க அரசு தொடர்ந்து, சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா பரவியதாக தொடர்ந்து கூறி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்க எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநர் கிறிஸ்டோபர் தொலைகாட்சிக்கு அளித்தப் பேட்டியில் … Read more

கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம்: அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனாவின் வூகானில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான் கொரோனா பரவியதாக அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது. உலகையே சுமார் 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக சீனாவே இருந்ததாக எப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வூகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி வளாகங்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வூகான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் … Read more

கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம்: அமெரிக்கா உளவு அமைப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன் சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் 2 ஆண்டுகளாக நீடித்தது சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர். கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், ஹுனன் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக … Read more

ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 26 பேர் பலி

ஏதேன்ஸ், கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து … Read more

ஈரானில் 83.7% செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் கண்டுபிடிப்பு: ஐ.நா

தெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ. நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழு கூறும்போது, “ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 22-ஆம் தேதி அன்று, ஈரானின் ஃபோர்டோ ஆலையில் சுற்றுச்சூழல் மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகள் 83.7% வரை உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் இருப்பதைக் காட்டியது” என்று தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள ஈரான், கடந்த ஆண்டு … Read more