துருக்கி பூகம்பம் | பிறந்து 10 நாள் ஆன குழந்தை 90 மணி நேரத்துக்குப் பின் தாயுடன் மீட்பு!
டமஸ்கஸ்: துருக்கியில் பிறந்து 10 நாட்களான குழந்தை 90 மணி நேரங்களுக்குப் பிறகு பூகம்ப இடிபாடுகளிலிருந்து தாயுடன் மீட்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கியில் ஹடாய் நகரமும் ஒன்று. இங்கு 5 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஹடாய் நகரில் பிறந்த 10 நாட்களான குழந்தை ஒன்று, அதன் தாயுடன் 90 மணி நேரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாகிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை காயங்களுடன் … Read more