ஈரான் | பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம் வைத்த மத அடிப்படைவாதிகள்

தெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில் நஞ்சு … Read more

இந்திய ஐடி தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்; ஜெர்மன் அதிபர் அறிவிப்பு.!

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு சென்று விட்டார். வருகிற செப்டம்பரில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தவுள்ள பிரதமர் மோடியுடன், பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதுடன், உக்ரைனில் ரஷ்யாவின் போரைப் பற்றி விவாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டது ஜேர்மன் தலைவரின் இந்தியா பயணம். ஒரு பெரிய வணிகக் குழுவுடன் பயணம் செய்த ஜெர்மன் அதிபர், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க … Read more

தீவிரவாதிகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி..!

பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறி வைத்து பாகிஸ்தான் தலிபான் என்ற தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போலீஸாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளுதல், உயரமான கட்டடங்களிலிருந்து கயிறு கட்டி கீழே இறங்குதல், ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு கயிறு மூலமாக செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் பெண் கமாண்டோ படையினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளின் கொரில்லா தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கைபர் பக்துன்க்வா பகுதியிலுள்ள போலீசாருக்கு … Read more

காட்டுக்குள் குட்டி டைனோசர்களா..? இணையத்தை அதிர வைத்த வீடியோ.!

வாஷிங்டன், பூமியில் மனித இனம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. விண்வெளியில் இருந்து பூமியின் மீது மோதிய ஒரு ராட்சத விண்கல் காரணமாக, பூமியின் தட்பவெப்ப நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தால், மொத்த டைனோசர் இனமும் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வாறு அழிந்து போன டைனோசர்களின் புதை படிமங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த புதைபடிமங்களின் அடிப்படையில் டைனோசர்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சேர்ந்தவை என்பது … Read more

அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட பயங்கர பனிப்புயல் – 1.20 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை பந்தாடியது. இந்த புயலால் டஜன் … Read more

இந்தியாவின் வளர்ச்சியும் முக்கியத்துவமும் மேலும் அதிகரிக்கும்: அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர்

வாஷிங்டன்: இந்தியாவின் வளர்ச்சியும் அதன் சர்வதேச முக்கியத்துவமும் மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நான்சி இசோ ஜாக்சன் தெரிவித்துள்ளார். சிலிகான் பள்ளத்தாக்கிற்கு கடந்த வாரம் வந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நான்சி இசோ ஜாக்சன், அங்குள்ள சமுதாய தலைவர்களிடமும், இந்திய ஊடகங்களிடமும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. சர்வதேச அரங்கில் அதன் முக்கியத்துவம் மேலும் வளரும். அதேபோல், … Read more

அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது – 5 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, டாக்டர், நர்சு, நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.25 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 97 லட்சத்து 17 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 4 ஆயிரத்து 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

இத்தாலி கடற்பகுதியில் படகு மூழ்கி 59 அகதிகள் பலி

ரோம், வறுமை மற்றும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் 100-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது. இதில் 59-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். இதுவரை 59 … Read more

இலங்கைத் தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட போராட்டம்!

இலங்கையில், உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தக்கோரி தலைநகர் கொழும்புவில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை நிதிப் பற்றாக்குறை காரணமாக ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் தடையை மீறி அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சியினரை கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர். Source link