பாகிஸ்தானில் உள்ள பாலகோட் தாக்குதலின் 4-ம் ஆண்டு தினம்: 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கி.மீ. ஊடுருவிய இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலின் 4-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அடுத்த 3 மணி நேரத்துக்குள் ராணுவ தரப்பில் திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி பாகிஸ்தானின் … Read more

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – அமெரிக்கா

 உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவினால், சீனா அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்யாவுக்கு உதவி செய்ய வேண்டுமா என்பதை சீனாதான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சீனத்தலைவர்கள் யோசித்து வருவதாகவும் தெரிவித்தார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க சீன அரசாங்கம் பரிசீலித்து வருவதாக … Read more

மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து சாட்ஜிபிடி மூலம் ரூ.9 லட்சம் வசூல் செய்த தலைமை அதிகாரி

ஒட்டாவா: சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்தது.இணைய உலகில் சாட்ஜிபிடிபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் ஒரு கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய பதிலை உடனடியாக சாட்ஜிபிடி வழங்குகிறது. இந்நிலையில், சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி, கனடாவில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கிரேக் ஐசன்பெர்க் கனடாவில் வடி வமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு சேவை வழங்கியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அதற்குரிய பணத்தை வழங்காமல் தொடர்பைத் … Read more

பாகிஸ்தான் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்

பாகிஸ்தான் மருத்துவமனைகளில்  இன்சூலின் உள்ளிட்ட முக்கியமான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தான், பல்வேறு மருந்துகளின் இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில்  இன்சூலின், டிஸ்பிரின், கால்போல், போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்,  நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.  மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின்போது பயன்படும் அனஸ்தியா மருந்து, 2 வாரங்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாகவும் … Read more

Alzheimer:19 வயது இளைஞருக்கு அல்சைமர் பாதிப்பு! டீனேஜர்களையும் பாதிக்கும் கொடூர நோய்

Bad Truth Of Alzheimer: சீனாவில் 19 வயது இளைஞருக்கு அல்சைமர் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதனால் அவர் இந்த நிலையில் மிகக் குறைந்த வயதுடையவர் என்று தென் சீனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கின் கேபிட்டல் மெடிக்கல் யுனிவர்சிட்டியின் சுவான்வு மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அல்சைமரால் பாதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர்னின் நினைவாற்றல் இரண்டு ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. சமீபத்தில் என்ன நடந்தது என்பதையோ அல்லது தனது உடைமைகளை எங்கே வைத்தார்கள் என்பது அவருக்கு நினைவில் இல்லை. பெய்ஜிங்கில் … Read more

1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்: துருக்கியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

அங்காரா: துருக்கியில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் நிகழ்ந்தது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில், துருக்கியில் மட்டும் பல்வேறு பகுதிகளில் ஒருலட்சத்து 60 ஆயிரம் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. அவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள்வசித்தனர். அவர்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் வீடுகளை இழந்துமுகாம்களில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் … Read more

இறக்குமதி செய்ய பணமில்லாததால் பாக்.கில் மருந்து தட்டுப்பாடு: அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை

கராச்சி: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு தீவிர கடன் சுமை உள்ளது. இதனால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடி யாத நிலையில் நாட்டின் பொரு ளாதாரம் உள்ளது. பாகிஸ்தான் அதன் மருந்து தயா ரிப்புக்கான மூலப்பொருட்களில் 95 சதவீதம் இந்தியா, சீனா உட்பட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் … Read more

பாறைகளில் மோதி கடலில் மூழ்கிய அகதிகள் படகு.. குழந்தைகள், பெண்கள் உள்பட 59 பேர் கடலில் மூழ்கி பலி!

அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கி வந்த கப்பல், பாறைகளில் மோதி மூழ்கியதில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை உள்பட 59 பேர் உயிரிழந்தனர். 120 க்கும் மேற்பட்ட அகதிகளுடன் Calabria பகுதி நோக்கி சென்ற கப்பல், கரையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலிருந்த பாறைகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. கடல் சீற்றத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த அந்த கப்பல், நீரில் வேகமாக மூழ்கத் தொடங்கியதும் சிலர் வேகமாக நீச்சலடித்து கரை சேர்ந்தனர். இந்த விபத்தில் பிறந்து சில மாதங்களே … Read more