ஐ.நாவில் கைலாசா: நித்தியானந்தா அனுப்பிய பெண் பிரதிநிதிகள்… இது வேற லெவல் டிஸ்கஷன்!

நித்யானந்தா என்றால் கைலாசா தீவு ஞாபகம் வரும் அளவிற்கு மக்கள் மனங்களில் பதியத் தொடங்கி விட்டது. இந்த தீவு எங்கிருக்கிறது? நித்யானந்தா எங்கிருக்கிறார்? அவர் மீது இந்தியாவில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. நித்யானந்தா நடவடிக்கை இதற்கிடையில் தனது கைலாசாவை சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நித்யானந்தா முடுக்கி விட்டுள்ளார். தன்னுடைய நாட்டிற்கு தனி சட்டம், வெளியுறவுக் கொள்கை, நாணயம், ரிசர்வ் … Read more

பறவைக் காய்ச்சலால் பெரு நாட்டில் 63 ஆயிரம் பறவைகள், 716 கடற்சிங்கங்கள் உயிரிழப்பு..!

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள கடற்கரைகளில், பறவைக்காய்ச்சல் பாதிப்பால் நீர் நாய்கள் மற்றும் கடற்சிங்கங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன. அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பறவைக்காய்ச்சல் பரவத் தொடங்கிய நிலையில், இதுவரை 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளும், 716 கடற்சிங்கங்களும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தால், பெருவில் பறவைக்காய்ச்சல் சுகாதார அவசரநிலை நடப்பாண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Source link

ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு| Earthquake in Afghanistan: 4.3 on the Richter scale

பைசாபாத்: ஆப்கானிஸ்தானில் இன்று(பிப்.,26) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு ஆகியதாக, தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது. பைசாபாத்: ஆப்கானிஸ்தானில் இன்று(பிப்.,26) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு ஆகியதாக, தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது பைசாபாத்தில் இருந்து புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

இஸ்ரேலில் புதிய நீதித்துறை சட்டங்களுக்கு எதிராக 8வது வாரமாக தொடர் போராட்டம்..!

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் பிரமாண்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். நீதித்துறை நியமனங்களில் அரசின் கட்டுப்பாட்டை இறுக்கமாக்கும் சட்டங்களை எதிர்த்து 8வது வாரமாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. டெல் அவிவ் நகரில் நடந்த போராட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்று திரண்டு அரசுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். Source link

கலிஃபோர்னியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு.. பல அடி உயரத்திற்கு பனி உறைந்து கிடப்பதால் சாலைகள் மூடல்..!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குளிர்கால புயலால் உருவான பனிப்பொழிவால் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 85 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். கடும்பனி காரணமாக யோசெமிட்டி தேசிய பூங்கா 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. Source link

வடகொரியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு… வேளாண் கொள்கையை சரிசெய்வது குறித்து அவசர ஆலோசனை!

கோவிட் பேரிடர் காலத்திற்குப் பின்னர் வடகொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு அதிகரித்துள்ள போதும் இன்னும் பஞ்சம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. பலர் பட்டினியால் சாகும்நிலை குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரிய தலைவர்கள் அவசரப் பிரச்சினையாக சரியான வேளாண் கொள்கையை அமைப்பது குறித்து ஆலோசித்துவருகின்றனர். உணவுத் தட்டுப்பாடைக் கையாளத் தவறினால், அதிபர் கிம் ஜாங்கின் அணு ஆயுதத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவை இழக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். Source link

உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பஸ் பதவிக் காலம் 2024 ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் பதவி விலகப் போவதாக மால்பஸ் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து வரும் மே மாதம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியரான அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த நியமனத்துக்கு உலக வங்கியின் இயக்குநர்கள் வாரியம் ஒப்புதல் … Read more

வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம்; கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்.!

உலக வல்லரசும், முதலாளியுமான அமெரிக்காவிற்கே தண்ணி காட்டும் நாடாக ஆசிய நாடான வடகொரியா உள்ளது. பொதுவுடமை தத்துவத்தை ஏற்றுக் கொண்ட மக்களால் நிரம்பிய வடகொரியா, ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக கண்டம் விட்டு கண்டம் பாயும் தொடர் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. வடகொரியா கம்யூனிச நாடு என்பதால் முதலாளித்துவ நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு கருதி தன் நாடு சார்ந்த தகவல்களை மற்றொரு கம்யூனிச நாடான சீனாவைப் போன்று மிகுந்த எச்சரிக்கையோடு பராமரித்து வருகிறது. … Read more

துருக்கியில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக புதிய வீடுகளை கட்டும் பணிகள் தொடக்கம்

துருக்கியில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக புதிய வீடுகளை கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், சுமார் 15 லட்சம் மக்கள் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். துருக்கியில் இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓராண்டுக்குள் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அந்நாட்டு அதிபர் தையிப் … Read more