சீன ராணுவ முகாமை விமானம் மூலமாக உளவு பார்த்த அமெரிக்கா.. வானில் வழிமறித்த சீனா..!

அமெரிக்காவிற்குள் பலூனை அனுப்பி சீனா உளவு பார்த்த நிலையில், தென் சீன கடற்பகுதிக்கு தனது உளவு விமானத்தை அமெரிக்கா அனுப்பியதால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. பாராசெல் தீவில் அமைந்துள்ள தனது ராணுவ முகாமிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் 21 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமெரிக்க கப்பற்படையின் உளவு விமானம் பறந்ததைக் சீன கண்டறிந்தது. இதனையடுத்து, ஆயுதங்களுடன் கூடிய ஜெட் விமானத்தில் சென்று அமெரிக்க விமானத்தை 500 அடி இடைவெளியில் மறித்த … Read more

ஈரானின் புதிய ஏவுகணை..ட்ரம்பை கொல்ல காத்திருக்கிறோம்..ராணுவ தளபதி பேட்டி.!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. அதைத் தொடர்ந்து கடந்த 2020 ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க ராணுவப் படை ட்ரோன் தாக்குதல் நடத்தியதில், ஈரானின் சக்தி வாய்ந்த உயர்மட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். ‘‘வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிபர் ட்ரம்பின் … Read more

முதன்முறையாக வெளிநாட்டில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கும் தேஜஸ் போர் விமானம்

முதன்முறையாக இந்தியா அல்லாத, வெளிநாட்டில் நடைபெறும் வான் பயிற்சியில் பங்கேற்க, இலகுரக தேஜஸ் போர் விமானத்தை இந்திய விமானப்படை அனுப்பியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் 27-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள Ex Desert Flag வான் பயிற்சியில், அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 11 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5 தேஜஸ் விமானங்கள் மற்றும் இரு சி 17 விமானங்களுடன் இந்திய விமானப்படை குழு ஐக்கிய அரபு … Read more

கடும் பொருளாதார வீழ்ச்சி : சீனாவிடமிருந்து 700 மில்லியன் டாலர் கடனாகப் பெற்றது பாகிஸ்தான்..!

பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் உடனடிக் கடனாக சீனாவிடம் 700 மில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சியால் நிதி உதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார், சீனா டெவலப்மென்ட் வங்கியிடமிருந்து தங்களுக்கு 700 மில்லியன் டாலர் கடனுதவி வந்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Source link

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய நட்பை இந்தியா பயன்படுத்தும்: அமெரிக்கா நம்பிக்கை

புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா உடனான நட்பை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இது தொடர்பாக டொனால்ட் லு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு மிக நீண்ட கால நட்பு இருக்கிறது. பனிப்போர் காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான, மிக நீண்ட நட்பு இருந்து வருகிறது. உக்ரைன் போரை முடிவுக்குக் … Read more

கொலம்பியா நீதிமன்றத்தில் மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற வழக்கு விசாரணை

கொலம்பியாவில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணை மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் முதல்முறையாக விசாரிக்கப்பட்டது. கொலம்பியாவின் மக்தலேனா நிர்வாக நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட இரண்டு மணி நேர விசாரணையில், போக்குவரத்து குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மெட்டாவெர்ஸ் மூலம் நீதிமன்ற அறையில் தோன்றினர். அவர்களிடம் மாஜிஸ்திரேட் மரியா குயினோன்ஸ் விசாரணை நடத்தினார். இதன் மூலம் அதிவேக விர்ச்சுவல் ரியாலிட்டியில் விசாரணை நடத்திய முதல் நாடாக கொலம்பியா உள்ளது. மெட்டாவர்ஸ் அனுபவம் அற்புதமானது என நீதிபதி தெரிவித்தார். Source link

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததையடுத்து ஜெலன்ஸ்கி இதனை அறிவித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த 12 அம்ச திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. Source link

பாகிஸ்தான்: 15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, 60 வயது நபர் கட்டாய திருமணம் செய்த அவலம்

கராச்சி, பாகிஸ்தான் நாட்டில் பெரும்பான்மையாக முஸ்லிம் சமூகம் உள்ள சூழலில், அந்நாட்டில் சிறுபான்மை சமூக சிறுமிகளை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றி, அவர்களை முஸ்லிம் ஆடவர்கள் திருமணம் செய்து கொள்ளும் செய்திகள் பாகிஸ்தானிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இதனை குறிப்பிட்டு, மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கான, பிட்டர் வின்டர் என்ற செய்தி இதழ் வெளியிட்டுள்ள அறிக்கை திடுக்கிடும் தகவலை தெரிவிக்கின்றது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பைசாலாபாத் நகரில் அரசு பள்ளி … Read more

40,000 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலை.. முதற்கட்டமாக 2,000 கைதிகள் மாற்றம்..!

எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர். அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுமார் 40 ஆயிரம் கைதிகளை அடைக்கக் கூடிய வகையில் மிகப்பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது. அந்த சிறைச்சாலைக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் கைதிகள், மற்ற சிறைகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். எல் சால்வடாரில் குற்ற வழக்குகளில் சுமார் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை…!

பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அது அவர்களுக்கு இடையேயான 3-வது சந்திப்பு ஆகும். அந்த சந்திப்பில், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு துறையில் கூட்டான ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன. அப்போது, இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இன்று இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, … Read more