சிரியாவில் இடிபாடுகளில் பிறந்த குழந்தை ‘அயா’வை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம்!

டமஸ்கஸ்: சிரியாவில் பூகம்ப இடிபாடுகளில் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் விரும்புவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் ஜிண்டெரிஸ் பகுதியில் திங்கள்கிழமை காலை பூகம்பம் ஏற்பட்டபோது ஒரு தம்பதியும், அவர்களது நான்கு குழந்தைகளும் தங்கள் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், கட்டிடம் அவர்கள் மீது இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் பெண்ணின் உடல் அருகே பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. அப்பெண் இறக்கும் தருவாயில் இக்குழந்தையை பிரசவித்திருக்கலாம் என … Read more

துருக்கியில் 6 வயது குழந்தையை உயிருடன் மீட்ட இந்திய ராணுவத்திற்கு அமித்ஷா பாராட்டு

துருக்கியில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெண் ராணுவ அதிகாரியின் கன்னத்தில் துருக்கி பெண்மணி ஒருவர் முத்தமிட்டு வாழ்த்தினார். ஆபரேசன் தோஸ்த் என்ற பெயரில் சிரியா மற்றும் துருக்கிக்கு இந்தியா ஆறு ராணுவ விமானங்களில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினரை இந்தியா அனுப்பியுள்ளது. 135 டன் மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களும் அங்கு அனுப்பப்பட்டு உள்ளன. இதனிடையே, காசியான்டெப் நகரில் 6 வயது சிறுமியை தேசிய … Read more

துருக்கி நிலநடுக்கம்! வாட்ஸ்அப் ஸ்டேடஸால் இடிபாடுகளில் இருந்த மீட்கப்பட்ட நபர்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் உள்ள நிசான்டாசி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் போரன் குபாத், வாட்ஸ்அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் மூலம் தனது இருப்பிடத்தைப் பகிர்ந்த பின்னர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டார். குபாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரான மாலத்யாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். “இந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை பார்ப்பவர்கள், தயவுசெய்து வந்து உதவுங்கள். தயவுசெய்து அனைவரும் வந்து எங்களை காப்பாற்றுங்கள்” என்று குபாத் வீடியோவில் கூறியதை, வைஸ் … Read more

குளிரில் நடுங்கும் சிரியா, துருக்கி மக்கள்| The people of Syria and Turkey are shivering in the cold

காஸியான்டெப்: நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை, ௧9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், உயிர் தப்பியவர்கள் போதிய உணவு, குடிநீர் இல்லாமல், பொது இடங்களில் கடும் குளிரில் நடுங்கி வருகின்றனர். மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த, ௬ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது, ௭.௮ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், ௬,௦௦௦க்கும் மேற்பட்ட … Read more

இலங்கை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இணையமைச்சர் எல்.முருகன்

யாழ்ப்பாணம்: இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர். இன்று காலை 11 மணியளவில், இந்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர். அப்போது, … Read more

பரிதாப நிலையில் பாகிஸ்தான் மக்கள்: பெட்ரோல் தட்டுப்பாட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

லாகூர்: பாகிஸ்தானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவை எரிபொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் முறையாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை விநியோகம் செய்வதில்லை என பாகிஸ்தான் பெட்ரோலிய பொருட்களுக்கான விநியோகஸ்தர்கள் சங்கமும் குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட … Read more

இந்தோனேசிய நிலநடுக்கம்: 4 பேர் உயிரிழப்பு; பல வீடுகள் சேதம்

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 4 பேர் பலியாகினர். பல வீடுகள் சேதமடைந்தன. இதுகுறித்து இந்தோனேசி்யாவின் தேசிய பேரிடர் குழு கூறும்போது, “இந்தோனேசியாவின் பப்பூவா கியூனியா மாகாணத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது. இதன் மையம் ஜெயபுரா பகுதியில் உள்ளது. ஆழம் 10 கிமீ. இந்த நிலநடுக்கத்தினால் ஓட்டல் மற்றும் பல்வேறு வீடுகள் பாதிக்கப்பட்டன. நிலநடுக்கத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், … Read more

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் பலி.. நிலநடுக்கத்தால் கடலுக்குள் இடிந்து விழுந்த உணவகம்!

இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் மையம் பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானதாகவும், இந்த நிலநடுக்கத்தின் போது ஜெயபுராவில் உணவகம் ஒன்று இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  Source link

பூகம்ப மீட்பு நடவடிக்கைகள் சுணக்கம்: துருக்கி அதிபர் எர்டோகன் மீது மக்கள் அதிருப்தி

அங்காரா: பூகம்ப மீட்பு நடவடிக்கைகளில் எர்டோகன் அரசு சிறப்பாக செயல்படவில்லை என துருக்கி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். துருக்கியில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. துருக்கி – சிரிய எல்லையில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு இதுவரை 21,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் 20 வருடங்களாக துருக்கியில் ஆட்சியில் இருந்து வரும் எர்டோகன் மீது … Read more