ஏழைகளின் இறைச்சி: இன்று உலக பயறு வகை தினம்| Meat of the poor: Today is World Pulses Day

தினசரி உணவில் பருப்பு வகைகள் இல்லாமல் சமையல் இல்லை என்றே சொல்லாம். ஏதாவது ஒரு உணவில் ஒரு வகை பயறு நிச்சயம் இடம் பெறும். தாவரங்களை விட அதிக சத்துகள் நிறைந்தவையாக பயறு வகைகள் உள்ளன. புரதச்சத்து அதிகமுள்ளவைகளில் பயறு வகை பயிர்களே முக்கிய இடம் வகிக்கின்றன. பயறு வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் 2019 முதல் பிப். 10ல் உலக பயறு வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பலரும் தினசரி உணவில் … Read more

போர் விமானங்களை வழங்க ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாரீஸில் இம்மானுவேல் மேக்ரன், மற்றும் ஓலாஃப் ஷால்ஸுடன் நேற்று, இரவு விருந்தில் பங்கேற்ற ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் வலியுறுத்தினார். இன்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் செல்லும் அவர், அங்கு நடைபெறும் ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். முன்னதாக நேற்று லண்டனில் பிரிட்டன் பிரதமர் … Read more

விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்க அதிபருக்கு பரிந்துரைகள்| Recommendations to US President to Reduce Visa Waiting Period

வாஷிங்டன்,-இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோர், ‘விசா’ பெறுவதற்கு காத்திருக்கும் காலம் அதிகமாக இருப்பதை குறைப்பதற்காக, அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை குழுவினர் பல பரிந்துரைகளை அளித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின், அமெரிக்காவுக்கு செல்வதற்காக விசா கேட்டு காத்திருக்கும் காலம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து மாணவர் விசா, வர்த்தக விசா, சுற்றுலா விசா பெறுவதற்கு, ௪௦௦ நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. சில குறிப்பிட்ட பிரிவுகளில், மூன்றாண்டுகள் வரை காத்திருக்கும் நிலை … Read more

ரஷ்ய அதிபரைச் சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்; சீனா முகம் சுளிப்பு.!

உக்ரைன் நேட்டோவில் இணையப் போவதாக அறிவித்த பின்பு, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா படையெடுத்தது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக நீடிக்கும் இந்த போர், அணு ஆயுத போருக்கும் மற்றும் மூன்றாம் உலகப் போருக்கும் வித்திட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர் கருதுகின்றனர். ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்க கூடாது என அமெரிக்கா ஏகாதிபத்தியம் செய்த நிலையில், இந்தியா அதை கொள்முதல் செய்து வருகிறது. இந்தியா- ரஷ்யா இடையேயான நீண்டகால நட்பு இன்னும் தொடர்ந்து வருவதற்கு … Read more

சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கிய விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து வரும் கால்நடை மருத்துவக் குழு

சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்த விலங்குகளை கால்நடை மருத்துவர்கள் குழுவினர் மீட்டு சிகிச்சையளித்து வருகின்றனர். சிலியின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2 லட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், கான்செப்சியன் பல்கலைக்கழக கால்நடை மருத்துவக் குழுவும், நியூபிள் வனவிலங்கு மறுவாழ்வு மையமும் இணைந்து, காயமடைந்த … Read more

துருக்கி நிலநடுக்கம்; 17 ஆயிரம் பேர் பலி.!

துருக்கி – சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் … Read more

ரஷ்ய அதிபர் புடினுடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இந்தியா-ரஷ்யா இடையேயான கூட்டாண்மையை செயல்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.   Source link

அமெரிக்க விசா காத்திருப்பு காலம்: குறைக்க அதிபருக்கு பரிந்துரைகள்| US Visa Waiting Period: Recommendations to President to Reduce

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் :இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோர், ‘விசா’ பெறுவதற்கு காத்திருக்கும் காலம் அதிகமாக இருப்பதை குறைப்பதற்காக, அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை குழுவினர் பல பரிந்துரைகளை அளித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின், அமெரிக்காவுக்கு செல்வதற்காக விசா கேட்டு காத்திருக்கும் காலம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து மாணவர் விசா, வர்த்தக விசா, சுற்றுலா விசா பெறுவதற்கு, 400 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. சில … Read more

துருக்கி,சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 20,000 ஆக உயர்வு| Turkey, Syria earthquake: Death toll rises to 19,300

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கி , சிரியாவில் ஏற்பட்ட பூம்பத்தினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால், அந்த பகுதிகளில் கட்டட குவியல்களாக காட்சியளிக்கின்றன. அதற்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆங்காங்கே இடிபாடுகளில் சிக்கி சடலமாக … Read more

பூகம்பமும் பின்புலமும்: துருக்கியில் பல்லாயிர கட்டிடங்கள் நொறுங்கியது ஏன்?

துருக்கி – சிரியா பூகம்ப பலி 19,000-ஐ கடந்துள்ள நிலையில், துருக்கியில் மட்டும் இதுவரை 16,546 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 3,162 பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில், துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் விழுந்து நொறுங்க நிலநடுக்கம் மட்டுமே காரணமா என்பதை அலசுவோம். கடந்த திங்கள்கிழமை அன்று துருக்கி நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் 10 மாகாணங்களில் சுமார் 6,444 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் நம்பிக்கையை தளர விடாமல் யாரேனும் … Read more