அதிக உயரத்தில் இருந்து தலைகுப்புற குதிக்கும் டெத் டைவிங் போட்டி… சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக டிக்டாக் நிறுவனம் அச்சம்

வெளிநாடுகளில் டெத் டைவிங் முறையில் நீரில் குதிப்பது சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 1970களில் நார்வே நாட்டில் தொடங்கிய இந்த விபரீதமான விளையாட்டில் பல அடி உயரத்தில் இருந்து நீரில் குப்புறவோ அல்லது முதுகில் அடிபடுவது போல குதிப்பது டெத் டைவிங் என அழைக்கப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமின்றி தற்போது சிறுவர்கள் கூட இந்த விளையாட்டில் ஈடுபடுவது பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக டிக்டாக் … Read more

நிலத்தடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான போர் விமானப்படைத் தளத்தின் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஈரான்

நிலத்தடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான போர் விமானப்படைத் தளத்தின் வீடியோவை ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஈகிள் 44 என அழைக்கப்படும் இந்தத் தளம் நாட்டின் மிக முக்கியமான விமானப்படை தளங்களில் ஒன்றாகும். இந்தத் தளத்தில் நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ ஆர் என் ஏ தெரிவித்துள்ளது. ஆழமான நிலத்தின் அடியில் கட்டப்பட்டுள் ஈகிள் 44 எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. … Read more

இந்தியாவையும் உளவு பார்த்த சீன பலூன் :அமெரிக்க நாளிதழில் பரபரப்பு கட்டுரை| A Chinese balloon that spied on India: sensational article in an American newspaper

வாஷிங்டன்: உளவு பலுான்களை பறக்கவிட்டு, அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சீன அரசு உளவு பார்த்த விபரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் வான்வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பலுான் ஒன்று பறப்பதை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கண்டறிந்தது. அதை தொடர்ந்து கண்காணித்த நிலையில், அது சீன ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலுான் என்பது தெரிய வந்தது. பின், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அது குறித்த தொழில்நுட்ப விபரங்களை … Read more

கருக்கலைப்புக்குத் தடை விதிக்கக்கோரி 40 மாடி கட்டிடத்தில் ‘ஸ்பைடர்-மேன்’ போல் ஏறிய இளைஞர் கைது..!

அமெரிக்காவில், 22 வயது இளைஞர் ஒருவர், கருக்கலைப்பு அனுமதி சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி பீனிக்ஸ் நகரிலுள்ள 40 மாடி கட்டிடத்தின் சுவரை பிடித்து ஸ்பைடர் மேன் போல் ஏறினார். நாற்பதாவது மாடியில் காத்திருந்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். தன்னை தானே Pro-life Spiderman என அழைத்துக்கொள்ளும் மெய்சோன் டெஷா, கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை கண்டித்து உயரமான கட்டிடங்களில் ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்தாண்டு, சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க் நகரங்களிலுள்ள 1000 அடி … Read more

உக்ரைன் அதிபர் இங்கிலாந்து பயணம்; ரஷ்யா எரிச்சல்.!

வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி … Read more

இந்தியாவை உளவு பார்க்கும் சீனா; அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு.!

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதன் வான் எல்லைக்குள் அமெரிக்காவின் பலூன் பறந்தது. இது சீனாவை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய பலூன் என சீனா குற்றம்சாட்டியது. அதற்கு எதிர்வினையாக அமெரிக்காவின் வான் பகுதியில் சீன பலூன் ஒன்று பறந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது வானிலையை ஆய்வு செய்ய பறக்க விடப்பட்டது என்றும், அதிக காற்றின் காரணமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து விட்டதாகவும் சீனா விளக்கம் அளித்தது. ஆனால் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு சென்றடைந்த சீனா மீட்புக்குழு..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு சீனாவில் இருந்து மீட்புக்குழுவினர் சென்றுள்ளனர். நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள துருக்கிக்கு பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. சீனா அனுப்பிய மீட்புக்குழு தெற்கு துருக்கி நகரமான அதானாவுக்கு இன்று சென்றடைந்தது. துருக்கி அரசு வேண்டுகோளில் பேரில் சென்றுள்ள 82 பேர் கொண்ட மீட்புக்குழுவினருடன், 20 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 4 மீட்பு நாய்களும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதனிடையே, துருக்கி மலாட்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 50 மணி நேரத்திற்கு பின் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த வளர்ப்பு … Read more

தப்பிய குடும்பம், இடிபாடுகளில் பிறந்த குழந்தை – சிரியா பூகம்ப மீட்புப் பணிகளும் சில நம்பிக்கைத் துளிகளும்

டமஸ்கஸ்: சிரியாவில் பூகம்பத்தினால் சரிந்த கட்டிடங்களுக்கு இடையே ஒரு குடும்பமே மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிரிய பாதுகாப்புப் படையினர் கூறும்போது, “வடக்கு இட்லிப் பகுதியில் உள்ள பிஸ்னியா கிராமத்தில் பூகம்பத்தினால் சரிந்த கட்டிங்களுக்கு இடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என அனைவரும் மீட்கப்பட்டனர்” என்று தெரிவித்தனர். பாதுகாப்புப் படையினரால் அந்தக் குடும்பத்தினர் மீட்கப்படும்போது சுற்றி இருந்த மக்கள் ஆரவாரம் குரல் எழுப்பி வரவேற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. A true … Read more