இந்தியர்களுக்கு அதிக அளவில் பணி வழங்கிய சவுதி அரேபியா
2022 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியர்களுக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 630 வேலைகளை சவூதிஅரேபியா வழங்கியது. இதேபோன்று குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் சென்றுள்ளனர். இந்திய தொழில் வல்லுநர்களில் 20 முதல் 23 சதவீதம் பேர் மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், வங்கியாளர்கள் என உயர்ரகப் பணிகளில் உள்ளனர். Source link