ஒவ்வொரு நிமிடத்தையும் பீதியுடன் கழிக்கிறோம் – துருக்கியில் ஆந்திர தொழிலாளர்கள் கதறல்

ஸ்ரீகாகுளம்: துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த 2 நாட்களாக தொடர் பூகம்பங்களால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயங்கள் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், துருக்கியில் அதானா நகரில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், கவிடி, சோம்பேட்டா, கஞ்சிலி பகுதியை சேர்ந்த சிலர் கட்டிட கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின் றனர். தற்போது அங்கு தொடர் பூகம்பம் ஏற்படுவதால், இவர்கள் அனைவரும் பீதியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் … Read more

பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் 1.50 கோடி மக்களுக்கு பாதிப்பு..!

பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வில், உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் ஆபத்தான விகிதத்தில் உருகி வருவதாகத் தெரிவித்துள்ளது. இவை வெளியேற்றும் அதிக அளவிலான நீர், பனிப்பாறை விட்டுச் சென்ற அழுத்தத்தை நிரப்புவதால், இதுவே பனிப்பாறை ஏரி என குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அருகில் வசிக்கும் ஒருகோடியே … Read more

நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்த கார் – பஸ்; 30 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணம் கில்கித்தில் இருந்து ராவல்பெண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சும், காரும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. … Read more

ரஷ்யாவிடமிருந்து மூன்றாம் கட்டமாக எஸ்-400 ஏவுகணை இந்தியாவுக்கு விரைவில் விநியோகம் – தூதர் டெனிஸ் அலிபோவ் தகவல்

புதுடெல்லி: எஸ்-400 ஏவுகணையின் 3-வதுதொகுப்பு, இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி இந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா விநியோகம் செய்தது. இந்த ஏவுகணையின் முதல்தொகுப்பு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்தது. அந்த எஸ்-400 ஏவுகணை … Read more

தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய- அமெரிக்க மாணவி நடாஷா

வாஷிங்டன்: உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம் (13) தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் பார் டேலன்டடு யூத்’ (சிடிஒய்). ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிடிஒய் ஒரு தேர்வை நடத்தி பிரகாசமான மாணவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிலும் வகுப்புக்கும் மேற்பட்ட வகுப்புகளுக்குரிய பாடதிட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இரவு பகலாக மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. துருக்கி – சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களான நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் அசுரவேகத்தில் நடந்து வருகின்றன. வீடுகளை இழந்த 4 லட்சம் … Read more

பூகம்பத்தின் எதிரொலியாக துருக்கியில் வீட்டு வாடகை ரூ.1.31 லட்சமாக உயர்வு

அங்காரா: சிரியாவின் அசாஸ் நகரில் பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த நகரில் பெரும்பாலான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து நேற்று 7 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். சிறுமியின் தாய், தந்தை, உறவினர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர். என் அம்மா எங்கே எனறு சிறுமி தேம்பி தேம்பி அழுது கொண்டே இருக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் மீட்புப் படை வீரர்கள் தவித்து வருகின்றனர். சிரியாவை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “உள்நாட்டுப் … Read more

பொலிவியாவில் கொட்டித் தீர்த்த அதி கனமழை: 30,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால், விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. கிழக்கு பொலியாவில் பெய்த கனமழையால், 30 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கனமழை-வெள்ள பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில்,வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.  Source link

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை நிலநடுக்கம் – உயிரிழப்பு 5,200 ஆக அதிகரிப்பு

அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 312 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பெரிய பூகம்பத்தை தொடர்ந்து … Read more

அடுத்த ஆண்டில் இந்தியா வரும் போப்| The Pope will come to India next year

ரோம்:ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படும் போப் பிரான்சிஸ், அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கு திட்டமிட்டுள்ளார். போப் பிரான்சிஸ், ஆறு நாள் நல்லிணக்கப் பயணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ சென்றுவிட்டு, ரோம் நகருக்கு தனி விமானத்தில் திரும்பினார்; அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போர்ச்சுக்கல் தலைநகரான லிஸ்பன் நகரில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் உலக இளைஞர் தின கொண்டாட்டத்திலும், செப்., ௨௩ல் பிரான்சில் உள்ள மார்செய்ல் … Read more