துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இரு நாடுகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.  துருக்கியின் நுர்டாகி நகருக்கு அருகே சுமார் 18 கிலோ மீட்டர் ஆழத்தில், 7 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதனை தொடர்ந்து, துருக்கியில் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. இரவில் உலுக்கிய நிலநடுக்கத்தால், குடியிருப்பு கட்டடங்கள் விழுந்து, உறக்கத்திலேயே பலர் … Read more

3 சகோதரிகளை மணந்த கென்யா இளைஞர்| Kenyan youth who married 3 sisters

நைரோபி:கென்யாவில் மூன்று சகோதரிகளை, ஒரே நேரத்தில் இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததுடன், அவர்களுடன் அட்டவணை போட்டு வாழ்ந்து வருகிறார். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், கேட், ஈவ், மேரி ஆகிய மூன்று சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்தவர்கள். பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்துடன் காணப்படும் இவர்களை, ஸ்டீவோ என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளார். முதலில் கேட் என்பவரை ஸ்டீவோ சந்தித்து பேசிய நிலையில், இருவரும் பரஸ்பரம் காதலித்து … Read more

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த தொன்மையான கோட்டை

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அலெப்போ நகரில் உள்ள தொன்மையான கோட்டை இடிந்து விழுந்தது. இதுகுறித்து அந்நாட்டு தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையில், அலெப்போ கோட்டையில் இருந்த ஒட்டோமான் பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட சிறிய கோட்டை இடிந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலெப்போ கோட்டையின் சுற்றுச்சுவரும் முற்றிலும் சேதமடைந்ததாகவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இந்தக் கோட்டை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. Source link

நேற்றும்! துருக்கி குலுங்கியது…மிரட்டும் பலி எண்ணிக்கை| Yesterday too! Turkey shaken…scary death toll

அங்காரா, துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில், ௫,௦௦௦க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ௧௦ ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் ௬,௦௦௦க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. இதன் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மேற்காசிய நாடான துருக்கியின் தென்மேற்கே உள்ள காசியன்டெப்பை மையமாக வைத்து, நேற்று முன்தினம் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் … Read more

அமெரிக்காவில் 40 விழுக்காடு விலங்குகள் மற்றும் 34 விழுக்காடு தாவரங்கள் அழியும் அபாயம்

அமெரிக்காவில் 40 விழுக்காடு விலங்குகள் மற்றும் 34 விழுக்காடு தாவரங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழுவான NatureServe நடத்திய ஆய்வில், அமெரிக்காவின் அடையாளமாகக் கருதப்படும் crayfish போன்ற நன்னீர் மீன் வகைகள், உயிர் கொல்லி தாவரமான வீனஸ் ப்ளைட்ராப் போன்றவை விரைவில் அழிந்து விடும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.  Source link

ரூ. 290 கோடி… வாழ்க்கையை மாற்றிய லாட்டரி – 18 வயது சிறுமி வாங்கியதையெல்லாம் பாருங்க!

Canadian Girl Lottery: ஒரு நபர் திடீரென்று செல்வந்தராக மாறினால், பல விஷயங்கள் மாறக்கூடும். எல்லாவற்றையும் வாங்க முடியாவிட்டாலும், சந்தேகத்திற்கு இடமின்றி பணத்தால் வாங்கக்கூடியவை நிறைய உள்ளன. லாட்டரியை வென்ற பிறகு, ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் இதுவரை கேட்டறிராத ஒரு வாழ்க்கையாக, தனது வாழ்க்கையை தற்போது மாற்றியுள்ளார். லாட்டரியை வென்ற ஜூலியட் 18 வயதுதான் ஆகிறது. கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் அந்த சிறுமி, தனது பிறந்தநாளுக்கு தனித்துவமான ஒன்றைப் … Read more

காவல் அதிகாரி மீது 71 பாலியல் குற்றச்சாட்டுகள்.. 36 ஆயுள் தண்டனைகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

71 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த லண்டன் மாநகர முன்னாள் காவல் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றி பின் காவல்துறையில் சேர்ந்த டேவிட் காரிக்-கிற்கு, வி.ஐ.பி-களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பல பெண்களிடம் நயமாகப்பேசி தன்வசப்படுத்திய காரிக், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பலர் புகாரளிக்க அஞ்சிய நிலையில், ஒரு பெண் தைரியமாக முன்வந்து புகாரளித்ததால் கைது செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட காரிக்கிற்கு, 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,300-ஐக் கடந்தது

துருக்கி, சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உறவினர்களை இழந்து ஒரேநாளில் தங்கள் வாழ்க்கையே சின்னாபின்னமாகிப் போனதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியாமல் திகைத்து நின்கின்றனர். துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க 4 ஆயிரம் பேரைப் பலிகொண்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். வீடுகளை இழந்து, குடும்ப உறவினர்களைப் பறிகொடுத்து நிற்கும் ஒவ்வொருவர் முகத்திலும் அதிர்ச்சியும், பீதியும் மேலோங்கி உள்ளது நிலநடுக்கத்தின் போது … Read more

“நான் மீளவில்லை” – தாக்குலுக்குப் பிறகு சல்மான் ருஷ்டி பகிர்ந்த புகைப்படம்

நியூயார்க்: “நியூயார்க் நிகழ்வில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என்னை மனரீதியாகவும் பாதித்தது” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார். பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓர் இலக்கிய நிகழ்வில் பேசிக்கொண்டு இருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளானார். இந்தத் தாக்குதலில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு பிரபல பத்திரிகை நிறுவனத்துக்கு சல்மான் ருஷ்டி நேர்காணல் அளித்துள்ளார். அதில் … Read more

மெக்சிகோ சிறைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பொருட்கள் அழிப்பு..!

மெக்சிகோவின் ஜுவாரஸ் நகர சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பொருட்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டன. கடந்த மாதம் அங்கு வெடித்த கலவரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சிறைச்சாலையிலுள்ள ரகசிய கதவு வழியாக மக்கள் ஊடுருவுவதையும், பொருட்கள் கொண்டுவரப்படுவதையும் கண்டுபிடித்த போலீசார், சிறை வளாகங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகள், ஹீட்டர்கள், கடவுள் சிலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். Source link