ரூ. 290 கோடி… வாழ்க்கையை மாற்றிய லாட்டரி – 18 வயது சிறுமி வாங்கியதையெல்லாம் பாருங்க!

Canadian Girl Lottery: ஒரு நபர் திடீரென்று செல்வந்தராக மாறினால், பல விஷயங்கள் மாறக்கூடும். எல்லாவற்றையும் வாங்க முடியாவிட்டாலும், சந்தேகத்திற்கு இடமின்றி பணத்தால் வாங்கக்கூடியவை நிறைய உள்ளன. லாட்டரியை வென்ற பிறகு, ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் இதுவரை கேட்டறிராத ஒரு வாழ்க்கையாக, தனது வாழ்க்கையை தற்போது மாற்றியுள்ளார். லாட்டரியை வென்ற ஜூலியட் 18 வயதுதான் ஆகிறது. கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் அந்த சிறுமி, தனது பிறந்தநாளுக்கு தனித்துவமான ஒன்றைப் … Read more

காவல் அதிகாரி மீது 71 பாலியல் குற்றச்சாட்டுகள்.. 36 ஆயுள் தண்டனைகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

71 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த லண்டன் மாநகர முன்னாள் காவல் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றி பின் காவல்துறையில் சேர்ந்த டேவிட் காரிக்-கிற்கு, வி.ஐ.பி-களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பல பெண்களிடம் நயமாகப்பேசி தன்வசப்படுத்திய காரிக், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பலர் புகாரளிக்க அஞ்சிய நிலையில், ஒரு பெண் தைரியமாக முன்வந்து புகாரளித்ததால் கைது செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட காரிக்கிற்கு, 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,300-ஐக் கடந்தது

துருக்கி, சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உறவினர்களை இழந்து ஒரேநாளில் தங்கள் வாழ்க்கையே சின்னாபின்னமாகிப் போனதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியாமல் திகைத்து நின்கின்றனர். துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க 4 ஆயிரம் பேரைப் பலிகொண்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். வீடுகளை இழந்து, குடும்ப உறவினர்களைப் பறிகொடுத்து நிற்கும் ஒவ்வொருவர் முகத்திலும் அதிர்ச்சியும், பீதியும் மேலோங்கி உள்ளது நிலநடுக்கத்தின் போது … Read more

“நான் மீளவில்லை” – தாக்குலுக்குப் பிறகு சல்மான் ருஷ்டி பகிர்ந்த புகைப்படம்

நியூயார்க்: “நியூயார்க் நிகழ்வில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என்னை மனரீதியாகவும் பாதித்தது” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார். பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓர் இலக்கிய நிகழ்வில் பேசிக்கொண்டு இருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளானார். இந்தத் தாக்குதலில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு பிரபல பத்திரிகை நிறுவனத்துக்கு சல்மான் ருஷ்டி நேர்காணல் அளித்துள்ளார். அதில் … Read more

மெக்சிகோ சிறைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பொருட்கள் அழிப்பு..!

மெக்சிகோவின் ஜுவாரஸ் நகர சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பொருட்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டன. கடந்த மாதம் அங்கு வெடித்த கலவரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சிறைச்சாலையிலுள்ள ரகசிய கதவு வழியாக மக்கள் ஊடுருவுவதையும், பொருட்கள் கொண்டுவரப்படுவதையும் கண்டுபிடித்த போலீசார், சிறை வளாகங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகள், ஹீட்டர்கள், கடவுள் சிலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். Source link

பூகம்ப பாதிப்பு | விரைவாக உதவ முன்வந்தது இந்தியா: சிரிய தூதர் நெகிழ்ச்சி

புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு உடனடியாக உதவ இந்தியா முன்வந்ததாக இந்தியாவுக்கான சிரிய தூதர் பஸ்ஸாம் அல் காதிப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கள்கிழமை) நிகழ்ந்த பூகம்பங்களால் துருக்கிக்கு அடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு சிரியா. இந்நாட்டில் பூகம்பத்தால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பூகம்பத்தால் சிரியா பாதிக்கப்பட்டது குறித்த தகவல் அறிந்ததும், ஆழ்ந்த வேதனையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த … Read more

இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: 17வயது பாலஸ்தீன சிறுவன் உயிரிழப்பு

இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் இறந்ததாக பாலஸ்தீனம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேற்குக்கரை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட நப்லஸ் நகரிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் முகத்தில் குண்டுகாயத்துடன் சிறுவன் இறந்ததாகவும், மேலும் 3 பேரை ராணுவம் கைது செய்ததாகவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. ஆனால், பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டுகளை தாங்கள் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. Source … Read more

துருக்கியில் மூன்று மாதம் அவசர நிலை பிரகடனம்| A three-month state of emergency has been declared in Turkey

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்க பாதிப்பையடுத்து மூன்று மாதம் அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. துருக்கியில் கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று முறைதொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று (பிப்-7) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய துருக்கி பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5. 6 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே 3 முறை துருக்கியை நிலநடுக்கம் குலுக்கியதில் பல மாடி கட்டடங்கள் சரிந்து விழுந்தன. 4 ஆயிரத்திற்கும் மேலாக … Read more

துருக்கி, சிரியா பூகம்பம்: 5,000-ஐ கடந்த உயிரிழப்பு; தொடரும் மீட்புப் பணிகள்

அங்காரா: துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இரு நாடுகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து வருகிறது. சிரியாவை ஒட்டிய துருக்கி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பூகம்பம், இரு நாடுகளிலும் பெருத்த உயிர் மற்றும் பொருட் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,534 ஆகவும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் துணை அதிபர் ஃபாட் ஒக்தே தெரிவித்துள்ளார். இதனிடயே, சிரியாவில் பலி … Read more

கட்டட இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு.. நிலநடுக்கத்தில் இதுவரை 1600 பேர் பலி..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் ஜிண்டரைஸில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய இளம் பெண் மற்றும் சிறுவனை மீட்கும் காட்சி வெளியாகி உள்ளது. ஜிண்டைரஸில் கட்டட இடிபாடுகளில் தூசி மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்த இளம்பெண் நூரை வெள்ளை ஹெல்மட் மீட்பு படையினர் மீட்டனர். அதேபோல் ஜாந்தாரிஸ் நகரிலும் கட்டட கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கிய சிறுவனையும் மீட்புபடையினர் மீட்டனர். இந்நிலையில் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புபணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link